பக்கம்:வைணமும் தமிழும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

275


நீராடல் கால் கழுவுதல் என்பன போன்றவற்றை முன்னதாகச் செய்ய வேண்டும், வேறு வகையால் செய்யவொண்ணாது என்பது; அதிகாரி நியமமாவது, முதல் மூன்று வருணத்தார்கள் அல்லாதவர்களாக இருக்கலாகாது என்பது; பல நியமமாவது இம்மை மறுமைப் பயன்களில் இன்னபலத்திற்கு இது சாதனம், மற்றைய பலன்களுக்கு இது சாதனம் அன்று என்பது.

(ஆ). எடுத்துக்காட்டுகள் : இரவணனிடத்திலிருந்து வந்த வீடணனைத் தம்முடன் சேர்த்துக் கொள்ள GT-7 என்று சாம்பவானும், சுக்கிரீவனும் தம் கருத்தினைத் தெரிவித்தனர். இராமன் சிறிய திருவடியை வினவ, அவன் தன் கருத்தைத் தெரிவித்தது இது. “மனத்துரய்மையையுடைய வனான வீடணன் சரணம் என்று வந்த தேசத்திலும் காலத்திலு குறைபார்க்கக்கடவதன்று. அவன் வந்ததுவே தேசமும் அவன் வந்ததுவே காலமும்” என்று சிறிய திருவடி தம் கருத்தைத் தெரிவித்தான். இராமனும் அதனை ஒப்புக்கொண்ட்ான். இதனால் பிரமத்திக்குத்தேச கால நியமங்கள் இல்லை என்பது உறுதியாகின்றது.

இவ்வுலக மக்களுள் ஒருவருக்கு பகவானை அடைய வேண்டும் என்ற “ருசி” உண்டானால், அந்த ருசி தீருவதற்கு முன்பே அது தோன்றின நேரத்திலேயே இறைவனைப் பற்றி விடவேண்டும். இது மந்திர இரத்தினத்தில் முதற்பதமான் மதுப்பால் (ஸ்ரீமதே-என்பது) தோன்றுகின்றது என்பதாகக் குறிப்பிடும் ஸ்ரீவசனபூஷணம் (28).

மாதவிலக்காக இருக்கும் திரெளபதியைத் துச்சாதனன் அவைக்கு இழுந்து வருகின்றான்."சேலையும் களைவாய்” என்ற