பக்கம்:வைணமும் தமிழும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வைணவமும் தமிழும்



திருமாலின் அவதாரச் செயல்களைப்பற்றிக் கூறும் பாரத இராமாயணக் குறிப்புகள் பலவற்றைக் கலித்தொகையில் கலி-101, கலி-104, கலி-106, கலி-134 காணலாம்.

(ஈ) அகநானூறு : (1) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர, அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.

இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர். திரிகடுகம் (கடவுள் வாழ்த்து) சிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும் (209) திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் (2.30:3) அப்பர் தேவாரத்திலும்(6,310) வருகின்றன. ஆழ்வார் பெருமக்களும் இச்செய்தியைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுவர்.[1]

(ii) அகம் -70 இல்,

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த
வல்வீ லாலம்போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே


  1. குருந்தொசித்த வரலாறு பலராமன்வருதலையறிந்து கோபியரது மானம் காக்க வேண்டிக் கண்ணன் குருந்தொசித்துத் தன் செயலைத் தமையன் அறியாமல் செய்தான் என்ற அளவிலுள்ள வரலாறு தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வழங்கியதென்றே கருதலாம்.