பக்கம்:வைணமும் தமிழும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

313


சோலை மலை ; என்னத் : திருமால் வந்து என் நெஞ்சுநிறையப் புகுந்தான்” (திருவாய் 10.8.1)

(xviii), தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்புப் பொலியும்.

(xix). தாபம் மிக்கவர்கள் நீரை முகத்திலே தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது, படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமம்தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதுர வாங்கி” (திருக்குறுந்4) விழுங்குவார்கள். எம்பெருமானையும்.

(xx), நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதுமென்பன், “கூராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” (திருவாய். 6.9.1) என்பர்.

(xxi), நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல், செய்யக் காண் கின்றோம். “நேரே, கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை அயன் (முதல் திருவந், 56), “மருவுநின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணியாயிடை முத்தம் தருதும், உன் தாதையைப் போலும் வடிவுகண்டு கொண்டுள்ளம் குளிர, விரலைச்செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் மவ்வுரையும், திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” பெருதிரு75) என்பன அடைவே பிரமாணம். பகவத்