பக்கம்:வைணமும் தமிழும்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

317


(xi). “விண்ணிலமேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்” (நாச்திரு. 8:1) இத்யாதிப்படியே தூதுவிடப்படும் மேகம்; எம்பெருமானும் 'இன்னார் தூதனென நின்றான்' (பெரி.திரு. 22:3), “கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்; தூதனாய், மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 15:7).

(xii). மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும். எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே, மழை சிலர்க்குத் திங்கு சிலர்க்கு நன்மை, எம்பெருமான்படியும் அப்படியே."கஞ்சன் நாள் கவர்கருமுகில் எந்தாய்"(பெருதிரு. 710)"தாயர் மகிழ ஒன்னார் தளர் ‘(பெரியாழ் திரு.171) இத்யாதி.

(xiii). "எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்: மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” (பெரு.திரு. 5;7) என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம்: களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய் 5.8:8) என்றுஅந்நயகதிகளால் எதிர்பார்க்கப்படுகை ஒக்குமல்லவா?

(v). “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை'(குறள்-12) என்கின்றபடியே அன்னத்தின் அபிவிருத்திக்கு ஏதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயும் இருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப்படுபவனாயும் அன்றோ எம்பெருமான் இருப்பது?

(xy). எத்தனை கண்ணநீர் விழவிட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளாகிடக்கும் மேகம், பரதாழ்வான் பலருடனே சித்திரகூடத் தருகே போந்து கண்ணநீர் விழவிட்டு