பக்கம்:வைணமும் தமிழும்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

வைணவமும் தமிழும்



8. வைணவ அதிகாரிகள் : சிறப்பான சாத்திரங்களில் நுவலப்பெற்று அறுதியிடப்பெற்றுள்ள வைணவ அதிகாரிகள் பத்து விதமாக வகுப்புண்டிருப்பர்.

(அ) அத்வேஷிகள்: உலகத் தலைவனான திருமாலையும் தங்களுடைய பார்வையாலும், இரக்கத்தோடு .4-0 நினைவ்ாலும், அப்படிப்பட்ட ஸ்பரிசத்தாலும் மச்ச கூர்ம பிராணிகள் தங்களுடைய முட்டைகளை விருத்திசெய்து தங்களைப் போலாக்குதல் போலவே, உலகோரின் எல்லாப் பாவங்களையும் கடைக்கண்நோக்கு கருணையோடு தொடுதல் ஆகியவற்றால் போக்கநின்ற வைணவர்களையும் வெறுக்காமல் இருப்பவர்கள்.இவர்கள்.

(ஆ) அநுகூலர்கள் : வாசுதேவனுடைய உற்சவச் சிறப்பிலும், s)gff பாகவதர்களுடைய உற்சவத் தொண்டுகளிலும் ஈடுபட்டு இடைவிடாமல் அவர்கட்குத் துணையாக இருப்பவர்கள் இவர்கள்.

(இ) திருநாமதாரிகள் : நினைத்த மாத்திரத்திலும், நாவினால் உச்சரித்தமாத்திரத்திலும் எல்லாப் பாவங்களையும் நசிப்பிக்க வல்ல ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமத்தைச் சொல்லி திருமண்காப்பைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள்.

(ஈ) சக்ராங்கணபரர்கள் : சங்கம், சக்கரம், ஊர்த்துவ புண்டரம், துளசிமணி, நளினாட்சமாலிகைகளைத் தரித்தவர்களாய், சங்கு சக்கரம் தரியாதவர்களுடைய சரீரங்களையும் பார்க்கக் கூடாதென்று பிரமாணங்களை அறிந்தவர்களாய் இருப்பவர்கள் இவர்கள்.