பக்கம்:வைணவ உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 79 றாயின் இஃது எனக்கு வேண்டா' என்று சொல்லித் திரிதண்டத்தை விட்டெறியப் போனாராம். அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம். 25 கலையும் கரியும்2 . இது சாளக்கிராமத்தின் மீது மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருமொழி. இதில் உள்ள ஐதிகம் : செளபரி என்ற ஒரு மாமுனிவன் நீர் நிலையிலிருந்து கொண்டு தவம் புரிந்து கொண்டிருந் தான். அங்கள் மீன்கள் கூடிக் களித்து விளையாடக் கண்டான். தானும் இவ்வாறு குடும்ப வாழ்க்கையில் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டான். மாந்தாதா என்னும் அரசனிடம் சென்று அவனுடைய பல பெண்களையும் தனக்குக் கன்னிகாதானம் செய்யுமாறு வேண்டினான். அரசன் இவனுடைய கிழத்தனத்தையும் குரூர உருவத்தையும் கண்டு இசைய ஒருப்பட வில்லை. எனினும் முனிவன் முனிந்து சபித்துவிடக் கூடும் என்று அஞ்சினான். முனிவனைப் பெண்களிருக்குமிடத்திற்கு அனுப்பி அவர்கள் இசைந்தால்தான் திருமணம் புணர்ப்பதாகக் கூறினான். முனிவன் அங்கு செலலும்போது அழகிய உருவத்தை ஏற்றுக்கொண்டு அப்பெண்கள் முன்னிலையில் நின்றான். அங்கிருந்த ஐம்பது பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு இவன்மேல் விழுந்தனர். முனிவனும் அத்தனைப் பெண்களையும் மணந்து கொள்ள விரும்பித் தமது தவ வலிமையால் ஐம்பது வடிவங் கொண்டு அப்பெண்களை மணந்து கொண்டு மகிழ்ந்திருந்தான் என்பது புராண இதிகாசம். இதுபோலவே எம்பெருமானும் அடியார்களை 2. பெரி. திரு. 1.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/104&oldid=920704" இலிருந்து மீள்விக்கப்பட்டது