பக்கம்:வைணவ உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 உரைவைணவ வளம் கொண்டு ஏக, துரியோதனாதியர் அவனை எதிர்த்துப். போர் செய்து அவனைப் பிடித்துக் காவலிட்டு வைத்தனர். இச்செய்தியை அறிந்த பலராமர் தான் அவரை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அத்தினபுரம் வந்தார் கெளரவர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் அவனை விடுவிக்க மறுத்தனர். இதனால் பலராமர் அளவு கடந்த சினங்கொண்டு எழுந்திருந்து குருகு லத்தார் உறையும் இத் திருநகரத்தைக் கங்கையில் கவிழ்த்து விட்டு பூமியில் கெளரவப் பூண்டே அற்றுவிடும்படிச் செய்கிறேன்; பாருங்கள்' என்று கலப்பையை மதிலின்மீதுள்ள நாஞ்சில் என்னும் உறுப்பில் மாட்டி இழுத்தார். இதனால் நகர் முழுவதும் அசைந்து சாயத் தொடங்கவே, அது கண்ட கெளரவர்கள் மனங்கலங்கி சாம்பனை இலக்கணையோடும் பல சிறப்புகளோடும் கொண்டுவந்து விட்டுப் பலராமனை வணங்கினர். இராமனும் அக் கலப்பையை வாங்கி யருளினார். 27 இரண்டாம் பத்து இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக் கொண்டு போயிடவும் அதுகண்டென நெஞ்சம் என்பாய் வண்டு வாழ்வட வேங்கடமலை மீமிசை கோயில்கொண்டு அதனொடும், அண்ட மாண்டிருப் பார்க் கடிமைத்தொழில் பூண்டாயே. 1. பெரி. திரு. 2.1:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/107&oldid=920707" இலிருந்து மீள்விக்கப்பட்டது