பக்கம்:வைணவ உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 33 (இண்டை - பூமாலை; ஏத்துவார்-தோத்திரம் பண்ணுவார்; வான் - பரமபதம்; மீமிசை அண்டம்- நித்திய விபூதி, ! திருவேங்கடத்தை மங்களா சாசனம் செய்யும் திருமொழியில் ஒரு பாசுரம். எண்டிசையுமுள்ள பூக் கொண்டு ஏத்தியுகந்துகந்து, தொண்டரோங்கள் பாடி யாட' (திருவாய் 4.1:8) என்கிறபடி பலவகைப்பட்ட பூக் களைக் கையிலேந்திக் கொண்டுதுதிக்கவல்ல தொண்டர் களையும் அவர்களோடு சம்பந்தம்பெற்ற மற்றுமுள்ளாரை யும் எம்பெருமான் ஏற்றுக்கொண்டு பரமபதத்திலே கொண்டு சேர்க்கின்றான் என்கின்ற இந்தச் சிறந்த குணத்தைக் கண்டு நெஞ்சே! அத் திருவேங்கட முடையானுக்குத் தொண்டு பூண்டாயே, என்று உகக்கின்றார் ஆழ்வார். இண்டையாயின கொண்டு: இண்டை கொண்டு என்னா மல் இப்படிக் கூறுவதன் கருத்து யாது? எனில்: எம்பெரு மானுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்கிற தூய்மையான நோக்கத்துடன் கொள்ளுகின்ற மலர் எதுவாயிருந்தாலும் குற்றம் இல்லை; செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற பூக்க ளாகவே இருக்க வேண்டுமென்கிற நியதி இல்லை; ஏதேனும் ஒரு பூவாயிருக்கலாம் என்பது தோன்றும். சபூமாலையென்று பேர் பெற்றவற்றைக் கொண்டு என்று வியாக்கியானித்தருளினார் பெரியவாச்சான பிள்ளையும். இதனால் இன்ன பூ என்று அறுதியிடாமல் பூ என்று பெயர் பெற்றிருக்கும் எதுவும் பொருந்தும் என்பதாயிற்று. க. ப. ரி வ. தி ல் ஈசனை’’ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை (1,6:1) எடுத்து விளக்கும்போது புரிவதும் புகை பூவே என்ற சொல் நயத்தைத் திருவுள்ளம்பற்றிப் பட்டர் இவ்விடத்தில் அகிற்புகை என்றாவது, கருமுகைப் பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/108&oldid=920708" இலிருந்து மீள்விக்கப்பட்டது