பக்கம்:வைணவ உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 வைணவ உரைவளம் 3O காண்டவான மென்பதோர் காடமரர்க் கரையனது கண்டவன் கிற்க, முனே மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும் அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த் தாண்டான்,அவு ணன்.அவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய் ண்ேடான்குற ளாகிகி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது ர்ேமலையே4 (அமரர்க்கு அரையன்-தேவர்கட்குத் தலைவன். ஆர் அழல் - அக்கினி பகவான்; மூண்டு உண்ண - மேல் விழுந்து உட்கொள்ளும்படி யாக; பொறை தீர்த்து - பாரங்களைத் தீர்த்து; அவுணன்-இரணியன்; உகிர்-நகம்; வகிர் ஆக-இருபிளவாகும்படி; முனிந்துசீறி, அரிஆய்-நரசிங்கமாய்: நீண்டான்வளர்ந்திட்டவன்; நிமிர்ந்தவன் - வளர்த் திட்டவன்) திருநீர் மலை என்ற திவ்வியதேசத்தை அநுபவிக்கும் திருமொழியில் ஒரு பாசுரம். இந்திரன் பார்த்துக்கொண் டிருக்கையிலேயே அக்கினி பகவான் காண்டவவனத்தை இரையாக்கிக்கொள்ள நியமித்தவனும், பாரதப் போரில் பூமிபாரங்களைத் தீர்த்து உலகங்களை இரட்சித்தவனும் இரணியனை முடிக்க நரசிங்கமாய் வளர்ந்திட்டவனும், குறளுருவாகி திரிவிக்கிரமனாக வளர்த்திட்டவனுமான எம்பெருமான் கோயில் கொண்ட இடம் திருநீர் மலை யாகும்' என்கின்றார் ஆழ்வார். பெரி. திரு. 2.4:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/113&oldid=920714" இலிருந்து மீள்விக்கப்பட்டது