பக்கம்:வைணவ உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வைணவ உரைவளம் பகராதவ னாயிரம் நாமமடிப் பணியாதவ னைப்பணி யாலமரில் நிகராயெவன் நெஞ்சிடங் தானவனுக்கு இடமாமலை யாவது நீர்மலையே? (புகர் ஆர் உரு ஆகி-ஒளி மிக்க உருவையுடையவ னாய்; முனிந்தவன்-சினத்தைக் காட்டினவன். வீட-ஒழிய, அசுரன்-ஆசுரப்பிரகிருதியான அவனுடைய; நாமம்-பேர்; பாழ்படஅழிந்து போம்படி, அவுணன்-இரணியன்; நெஞ்சு-மார்பு; பணியால்-பிரகலாதனின் சொல் நிமித்தமாக, இடந்தான் - பிளந்: தான்) இதுவும் தி ரு நீ ர் மலை பற்றிய பாசுரமே. கண்ணனைப் போலவே திருவாழி திருச் சங்குகள் செல்வித்து அவற்றைத் தரித்து கொண்டதனால் ஒளிமிக்க உருவையுடையவனாய் தன் மீது கோபத்தைக் காட்டியவ. னான பெளண்ட்ரக வாசுதேவனை ஒழித்துக்கட்டி அவனு: டைய பலநகரங்களையும் அழிந்துபோம்படி, அழித்தவனும் பிரகலரதனுடைய பணியால் தன்னுடைய ஆயிர நாமம் ஒன்றையும் சொல்லாதவனும், தன் திருவடிகளில் வணங்காதவனுமான இரணியனின் மார்பைப் பிளந்தவனு: மான எம்பெருமான் கோயில் கொண்ட இடம் திருநீர் மலையாகும்' என்கின்றார். பெளண்ட்ரக வாசுதேவன்: கிருஷ்ணாவதாரத்தில் இந்தப் பெயர் கொண்ட ஒர் அரசன் பிறந்திருந்தான். பல மூடர்கள் திரண்டு நீதான் வாசுதேவன்' என்று அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால் அவனும் தருக்குற்றுத் தானே வாசுதேவன் என்று மயங்கி மார்பு 5. பெரி. தி.கு. 2.417

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/115&oldid=920716" இலிருந்து மீள்விக்கப்பட்டது