பக்கம்:வைணவ உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 9t நெறித்துச் சங்கு சக்கரம் கிரீடம் முதலியவற்றைச் செய் வித்துத் தான் அணிந்துகொண்டு தூதன் ஒருவனை அழைத்து, நீ கிருஷ்ணனிடம் சென்று என் பெயரைச் சொல்லி இன்னான் வாசுதேவனாயிருக்க நீ அவனுடைய சங்கு சக்கரங்களைத் தரிக்கக் கூடாது; இன்று முதல் விட்டு விட வேண்டியது; இல்லையாகில் அவனுடன் போர் தொடுத்து அவனை வென்றாயாகில் தரிக்கலாம்" என்று: சொல்ல வேண்டியது' என்று சொல்லியனுப்பினான். அந்தத் தூதனும் அங்ங்னமே கண்ணனை அடைந்து செய்தி யைச் சொல்ல, கண்ணபிரான் சினமுற்றுப் பெரிய திருவடி யின் மீதேறிச் சென்று போர் செய்து அப் பெளண்ட்ரக வாசுதேவனைத் தனது திருவாழியினால் தலையறுத்துக் றொழித்தான். அங்ங்னமே அவன் தனக்காக அமைத்துக் கொண்டிருந்த பல நகரங்களையும் நீறுபடுத்தினான். 32 பாராய துண்டுமிழ்ந்த பவளத் துணைப் படுகடலி லமுதத்தைப் பரிவாய்க் கீண்ட சீரானை, எம்மானைத் தொண்டர் தங்கள் சிங்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரரனைக் கொம்பொ சித்த போரேற்றினை புணர்மருத மிறங் டங்த பொற்குன்றினை காரனை யிடர்க டிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே" (பார்-உலகம், படுகடல்-ஆழ்ந்த கடல்; பரிவாய் --கேசியின் வாய்; கீண்ட-கிழித்த, சிந்தைநெஞ்சு; போர் ஆனை - குவலயா பீடம்; ஒசித்த - முறித்தெறிந்த: புணர் மருதம்இரட்டை மருத மரங்கள்; கார்ஆனை - கசேந்திரன்; இடர்-துன்பம்) 6. பெரி. திரு. 2.5:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/116&oldid=920717" இலிருந்து மீள்விக்கப்பட்டது