பக்கம்:வைணவ உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 97 இதுவும் தலசயனப் பெருமாள்மீதுள்ள பாசுரம். உலகுய்ய...கின்றானை: பரம்புருடனான எம்பெருமானுக்கு சேதநாசேநங்கள் முற்றும் சரீரமாக உள்ளன என்பது சித்தாந்தம். ஆகவே, சரீர-சரீரி பாவனையாகின்ற விசிஷ்ட வேஷத்தைப் பார்க்குமளவில் வேற்றுமை ஏற் படுவதற்கு வழியின்றியே என்றும் அபேதமாயுள்ளதாகச் சொல்லும்படியாக இருக்கும். உலகில் சரீரத்தோடு கூடிய ஓர் ஆன்மாவைப்பற்றிப் பேசும்போது, சரீரத்தைத் தனிப் பட்ட பொருளாகவும், சரீரியான ஆன்மாவைத் தனிப் பட்ட பொருளாகவும் பிரித்து இரண்டாகப் பேசாமல் இரண்டையும் சேர்த்து ஒரே பொருளாகப் பேசுகின்றோ மன்றோ? இந்த ஒன்றிய பேச்சுக்கு சரீர-சரீரி பாவனையா கின்ற சம்பந்தமே நிமித்தம்; அதுபோலவே, பிரமன் முதலிய தேவதைகட்கும் எம்பெருமானுக்கும் சரீர. சரீரி பாவனை சம்பந்தம் சாத்திர சித்தமாக இருப்பதால் அந்தச் சம்பந்தத் தையிட்டு நோக்குமளவில் வேற்றுமை தோன்றாது ஒற்றுமை தோன்றும்; இதனையே உடம்புருவில் மூர்த்தி வேறாய்' என்பதனால் அருளிச் செய்கின்றார்.

  • மூர்த்தி வேறாய் (கின்றானை) : உண்மையில் சொரூப பேதம் உண்டாகையாலே அதைச் சொன்னபடி, இத்தால் தேறின பொருள் யாதெனில் : ; பிரமன் சிவன் இந்திரன் சந்திரன் முதலிய தெய்வங்கள் எல்லாம் நாராயணனே' என்று சாத்திரத்தில் பலவிடங்களில் சொல்லப் பெற் றுள்ளது; அவ்விடங்களை எப்படி நிர்வகிக்க வேண்டுமென் றால், :பிரமன் முதலிய தெய்வங்களைச் சரீரமாகக் கொண்ட சர்வ சரீரியான சீமன் நாராயணன் ஒருவனே என்று சொல்லிற்றாக நிர்வகிக்கவேண்டும்; தெய்வங்கள் பல உள்ளனவாக எவ்விடங்களில் சொல்லப் பெற்றுள்ளதோ அவ்விடங்களில் சர்வசரீரியான சீமன் நாராயணனைக் காட்டில் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள சொரூப பேதம் சொல்லப்படுவதாக நிர்வகிக்க வேண்டும்

வை.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/122&oldid=920724" இலிருந்து மீள்விக்கப்பட்டது