பக்கம்:வைணவ உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி #21 செய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய் கறிகளும் மற்றுமுள்ள நைவேத்தியப் பொருள்களை யும் அமைப்பதைக் கண்டு கண்ணபிரான், ஒ பெரியோர் களே! இவை ஏதுக்காக?' என்றான். அதற்கு அவர்கள், அப்பா ! இந்திரன் அநுக்ரகத்தினால் காலங்களில் தகுதி யாக மழை பெய்து பசுக்களும் நாமும் சுகமாக வாழ்கின் றோம்; இனி எப்போதும் அந்த இந்திரன் நம்மை இப்படியே காக்க வேண்டும் என்கைக்காக ஆண்டுக் கொருமுறை பொங்கலிடுவதுண்டு; அதற்காக இவை யெல்லாம் சேர்த்து வைத்தோம்’ என்றனர். இது கேட்ட கண்ணன் நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் காப்பாற்றப்படுகின்றோமோ அதற்கன்றோ பூசை செய்ய வேண்டும்? இக் கோவர்த்தன மலையன்றோ பசுக்களுக்குப் புல்லும் தண்ணிரும் கொடுத்துக் காக்கின்றது? இந்திர னால் நமக்கு என்ன பயன் உண்டு? இவற்றை யெல்லாம் நீங்கள் இந்த மலைக்கே பலியிடுங்கள்" என்றான், இடை யர்களும் அப்படியே செய்யத் துணிந்து அவற்றை மலைக்கே பலியிட்டனர். கண்ணபிரான் அந்த மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே அமுது செய்திட்டான். பூசை யிழந்த இந்திரன் சீற்றமுற்றுத் தன் பரிசனங்களான மேகங்களை அழைத்து இடைக்குலத்துக்குப் பெரும் தீங்கு விளையும்படிக் கல்மாரி பொழியுங்கள் எனக் கட்டளை யிடவே, அப்படியே அம் மேகங்கள் வந்து ஏழு நாள் விடா மழை பெய்ய இடையரும் பசுக்களும் கதறிக் கதறிக் கண்ணனையே சரணம் அடைய, கண்ணபிரான் இடைக் குலத்துக்கு அபயமளித்து அந்த மலையைப் பெயர்த்துக் குடையாகத் தூக்கித் தாங்கிக் கோகுலத்தைச் சேர்ந்த சகல பிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக்கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காத்தருளினன். ஏழு நாள் இடைவிடாது கல் மாரி பொழிந்தும் யாருக்கும் எவ்விதமான தீங்கும் நேரிடாமையைக் கண்ட இந்திரன் கண்ணனுடைய மகிமைக்கு வியந்து கீழிறங்கி வந்து பணிந்து குற்ற மன்னிப்பு ஏற்றுக்கொண்டு தன்னிருப்பிடம் ஏகினன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/146&oldid=920750" இலிருந்து மீள்விக்கப்பட்டது