பக்கம்:வைணவ உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix ஒன்றது. பொன்னலர்ந்த நறுஞ் செறுந்திப்...ஊர் என்று போயினாரே' என்ற தொடருக்குப் பட்டர் கூறும் கற்பனா லங்காரம்(பக் 233)செவிக்குத்தேன் எனச் சுவை தரும்.என் நீtமை கண்டிரங்கி என்ற தொடருக்குப் பட்டர் தமிழ்ப் புலவர்க்குக் கூறிய பொருள் (பக். 234) புலவர்கட்குப் பெரு விருந்தாகும். உடலொடுங்கொண்டு கொடுத்தவனை என்ற தொடருக்குப் பட்டர் கூறும் ரஸோக்தி (பக். 327) நம்மை வியக்க வைக்கின்றது. சொற்பொரு கயம், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை கண்ட பெரியார் பலருள் நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் மேலும் பெயர் தெரியாத அரும்பத உரையாசிரியர் போன்ற நுண்மாண் நுழைபுலச் செல்வர் களின் உரை நயத்தை அறிந்து அநுபவித்துச் சுவைத்த பெருமக்களைத் திவ்வியப் பிரபந்த உரையாசிரியப்பெரு மக்கள் பிரபந்தத்தில் காணும் சொற்களுக்கும் சொற் றொடர் கட்கும் காட்டும் நயம் வியப்பால் மெய் சிவிர்க்கச் செய்யும். கண்ணார் கரும்பின்... நாங்கூர்’ என்ற சொற் றொடரில் கழைதின்று வைகி' எனவும் மண்ணேந்திள மேதிகள் வைகு எனவும் வரும் இடங்களில் வைகி, வைகு என்பதற்குப் பட்டர் காட்டும் இடம் புலவர்கட்கு நல் விருந்து. மாளிகை சூழ்தெருவில்... நாங்கூர்’ என் பதில் வலைச்சியர் விளைந்த நன்முத்துகளைக் கொடுத்து, நெல் லைப் பண்டமாற்றாகப் பெறும் திருநாங்கூர் என்ற தொடருக்குத் (பக். 137) தொனிப் பொருளாக வரைந் திருப்பதும் புலவர்கட்கு நல்விருந்தாகும். வலையுள் ...அகப்பட்டேன்' என்பதில் (பக். 368) வலை என்பது நோக்கையும் புன்முறுவலையும் காட்டுவதற்கு ஈட்டுரையில் காணப்பெறும் நயம் சிந்தனைக்கு நல்விருந்தரகும். வந்தருளி என் நெஞ்சிடங்காண்’ என்ற இடத்தில் வந்தருளி, வந்தருளி..." என்று மேலே போகமாட்டாமல் பாடுவாராம் ஆப்பான் திருவழுந்துார் அரையர். இதன் சடுபாடு நம் நெஞ்சை நெகிழ்விக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/17&oldid=920776" இலிருந்து மீள்விக்கப்பட்டது