பக்கம்:வைணவ உரைவளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 14ዝ (4) யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்தி லேயே அஃ அழுக்கோடு சேறும்; எம்பெருமான் சுத்த பவித் திரனாய் சுக்த சத்துவமயனாய் இருக்கச் செய்தேயும் 'பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா அழுக்குடம்பும்' (திருவிருத். 1) D - Gö) L—ILI நப்போலியருடன் சேரத் திருவுள்ளமாயிருப்பன், வாத்சல்யத்தாலே, (5) யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான். (6) யானை பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கம் வருபவர்களைத் தள்ளிவிடும்; எம்பெருமானும் வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து (திருவாய், 4.5;8) என்றபடி பாகவதர் களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான். (7) யானையின் மொழியைப் பாகனே அறிவான்; எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்: (8) யானையினுடைய நிற்றல், இருத்தல், இடத்தல், திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் : கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்க வேண்டா...உன்றன் பைந்தாகப் பாய் சுருட்டிக் கொள்' என்றும், கிடந்தவாறு எழுந்திருந்து பேசு' (திருச்சந்த, 6-1) என்றும் சொல்லு கின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லாவகையி லும் அடியன். (9) யானை உண்ணும்போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/172&oldid=920779" இலிருந்து மீள்விக்கப்பட்டது