பக்கம்:வைணவ உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 153 'திருவிண்ணகர்மீதுள்ள பதிகத்திலுள்ள ஒரு பாசுரம். 'பாம்புக்கு அஞ்சி ஓடிவந்து வீழுந்தேன்' என்பாரைப் போல வும், இராமன் அம்புக்கு நடுங்கி வந்து விழுந்தேன்' என்பாரைப் போலவும் மாதர்களின் கண்களாகி அம்புக்கு அஞ்சி வந்து நின்றேன்' என்கின்றார். திருவிண்ணகர்ஒப்பிலியப்பன் சந்நிதி. திருகறையூர்த் தேனே : பட்டர் திருநறையூர் பெருக் குக் குச் சினையாறு படுகிறது கிடாய்" என்று அருளிச் செய்வர்' என்பது வியாக்கியான பூரீசூக்தி. இதன் விளக்கம்: திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமான இத் திருமொழி முடிந்தவுடனே கண்ணுஞ் சுழன்று' என்ற திருமொழி தொடங்கிச் சினவிற் செங்கண்' என்ற திருமொழியளவும் நூறு பாசுரங்களாலே திருநறையூரை அநுபவிக்கப் போகிறாரே ஆழ்வார்; அதற்குள்ளே இப்போது திருநறையூர்த்தேனே' என்று அத்திருப்பதியைப் பற்றிக் குறிப்பிடுவானேன்? என்று கஞ்சியர் போல்வார் பட்டரைக் கேள்வி கேட்டனர் போலும்; அதற்குப் பட்டர் அருளிச் செய்த மாற்றம் இது; இதன் கருத்து யாதெனில்: ஆற்றில் பெரு வெள்ளம் வரப்போவதற்கு முன்னே ஆறு பொசிந்து காட்டுவது வழக்கம்; அது போல, நூறு பாசுரங் களாலே திருநறையூர்த் திருப்பதியநுபவமாகிற பெரு வெள்ளம் அண்மையில் வர இருப்பதால்,அதற்கு முன்னடை யாளமாகத் திருநறையூர்த்தேனே' என்று இவ்வாறு பொசிந்து காட்டுகிறது கிடாய் என்கை. இங்ங்னே,அழகான பொருள் பட்டர் திருவுள்ளத்தில் தானே தோன்றும். 62 சாந்தேக்து மென்முலையார் தடந்தோள்புணர் இன்பவெள்ளத் தாழ்ந்தேன். அருகரகத் தழுந்தும் பயன்படைத்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/178&oldid=920785" இலிருந்து மீள்விக்கப்பட்டது