பக்கம்:வைணவ உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வைணவ உரைவளம் போந்தேன் புண்ணியனே! உனையெய்தியென் தீவினைகள் தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே. " (சாந்து-குங்குமம்; தடதோள்- பருத்த தோள்; ஆழ்ந்தேன்-மூழ்கிக் கிடந்தேன்; எய்திகிட்டி) திருவிண்ணகர் விஷயமான திருமொழி; திருமங்கை மன்னன் அருளிச் செய்தது. கடந்த நாட்களில் அநியாய மாய்க் கெட்டுப் போனேன்; பாழாய்ப் போனேன்; சிற்றின்ப நுகர்ச்சியிலே ஆழ்ந்து நரகத்திலே அழிந்து நசிக்கப் பார்த்தேன்; தெய்வாதீனமாய் மீண்டு உன் திருவடிகளைச் சேர்ந்து உய்யும் வழிகண்டேன்' என் கின்றார் ஆழ்வார். ஓர் ஐதிகம் : விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்திலே வந்து சேர்ந்த ஆழ்வார் இழிந்த பொருள்களைப்பற்றி சாந்தேந்து மென் முலையார்’ என்றும், தடந்தோள் புணரின்ப வெள்ளம்" என்றும் விரக்தருக்கும் காமம் பிறக்கும் படியாக எதுக்கு வருணித்துப் பேசுகின்றார்?' என்று சிலர் பட்டரைக் கேட்டார்களாம்; அதற்கு அவர் அருளிச் செய்த மறு மொழி: , உலகத்தில் வாக்குப் படைத்தவர்கள் பலவகைப் படுவர்; சிலர் உள்ளத்தை உள்ளபடியே பேசுவார்கள்;சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமைக் குறைவினால் குறைபடப் பேசுவார்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்ப விஷயங் களையும் கணக்கப் பேசு வார்கள்; இப்படிப் பேச்சில் பல வகையுண்டு. பேசுகிறவர்களின் வாக்கின் போக்கை அதுசரித்து விஷயங்கள் சிறுத்துப் போவதும் பெருத்துப் 4. பெர். திரு. 3.8:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/179&oldid=920786" இலிருந்து மீள்விக்கப்பட்டது