பக்கம்:வைணவ உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 64 வைணவ உர்ைவளம் |பந்து ஆர்விரலாள்- பந்துபிடித்து விளையாடும் விரலையுடையவன்; பாஞ்சாலி-திரெளபதி: கந்து ஆர்களிறு-மதநீரின் மணம் பொருந்திய யானை, கழல்-வீரக்கழல்; கலங்க-மதி கலங்குமாறு; அயன்- பிரமன்: அணையஒத்த நந்தா-குறையாதர் திரெளபதியின் விரித்த கூந்தலை முடிப்பதற்காகப் பாரதப்போர் நடத்தின பெருமான் நறையூர் நம்பி என் கின்றார். பந்து கொண்டு விளையாடி விநோதமாகப் பொழுது போக்கப் பிறந்த பாஞ்சாலியைத் துச்சாதனன் பெரியசபை நடுவே இழுத்துவந்து அவமானப் படுத்தினான். அவள் இந்தப்பகைவர்களைத் தொலையச் செய்தாலன்றி கூந்தலை முடிப்பதில்லை' என்று சபதம் பண்ண அந்தச் சபதத்தை நிறைவேற்றவே கண்ணன் பாரதப் போரில் ஈடுபட்டான்' இங்குள்ள இதிகாசம் : :பாண்டவர்களையும் நிரசிக்கப் பிராப்தமாயிருக்க வைத்தது, திரெளபதியுடைய மங்கள சூத்திரத்துக்காக." *அருச்சுனனுக்குத் தூத்யசாரத் தியங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக" என்ற பூர் வசன பூஷண சூத்திரங்கள் இங்கே அறியத்தக்கன." திரெளபதியை துரியோதனாதியர் பேரவையில் துகிலு ரித்து அவமானப்படுத்தியதைப் பாண்டவர்கள் கண்டிருந் தும் அவர்கள் வாளா இருந்ததைச் சூதில் தோற்றமையை நினைத்துப் பொறுத்திருக்கலாம். ஆனால் அவள் கண்ண பிரானைச் சரணமடைந்த பின்பு அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது பெருங்குற்றம் (பாகவத அபசாரம்), எம்பெருமானடியார்களைப் பிறர்மானபங்கம் செய்வதைக் 1. ரீவசன 22, 23(புகுடோத்தம நாயுடு பதிப்பு)திரசித்தல்அழித்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/189&oldid=920797" இலிருந்து மீள்விக்கப்பட்டது