பக்கம்:வைணவ உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{66 வைணவ உரைவளம் செய்தது சரணாகதையான இவளுடைய சங்கற்பத்தின் படியே துரியோதனாதியர்களை ஒழித்து இவள் கூந்தலை முடியச் செய்வதற்காகவுே என்றதாயிற்று. 68 கல்லார் மதிற்குழ் கச்சி ககருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான், இலங்கைக்கோன் வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை, வீடணற்கு நல்லா னுடைய காமம் சொல்லில் நமோகா ராயணமே' |கல்லார்-கருங்கல்லாலான நச்சி-வாழவிரும்பி; பாடகம்-திருப்பாடகத்துள்; இருந்த-விற்றி ருக்கின்ற: வல்ஆள்-மிகவும் பலமான: ஆகம்உடல்; முனிந்த-சீறியழித்த; நல்லான்-நல்ல வனுமான : கல்லுயர்ந்த நெடுமதில்சூழ் கச்சியில் திருப்பாடகம் என்னும் திருப்பதியில் வீற்றிருப்பவனும், இராவணனைக் கொன்று வீடணனுக்கு அருள் சுரந்தவனுமான பெரு மானின் திருநாமம் எட்டெழுத்து மந்திரமாகும். இதிலுள்ள இதிகாசம் : கண்ணபிரான் பாண்டவ தூத னாய்த் துரியோதனனிடம் சென்றபொழுது துரியோதனன் இரகசியமாக தன் சபா மண்டபத்தில் மிகப் பெரிய நிலவறையொன்று தோண்டுவித்து அதனுள் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே இருக்க வைத்து 12 பெரி. திரு. 6. 10 : 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/191&oldid=920800" இலிருந்து மீள்விக்கப்பட்டது