பக்கம்:வைணவ உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 177 யூர்க்கு எழுந்தருள்வதற்கு முன்பும் எதிர்கொண்டு சென்றான் நம்பி; திருவிண்ணகரில் ஆழ்வார் எழுந்தருளி யிருக்கும்போது நம்பி எதிர்கொண்டு சென்றதனா லன்றோ திருநறையூர்த் தேனே! வருபுனல்சூழ் திருவிண் னகரானே!' என்று திருவிண்ணகர்ப் பதிகத்தில் பேசினார்; ஆழ்வார் திருநறையூரினின்றும் மீண்டும் திருவழுந்துரர் செல்லுமளவும் கூட வந்து வழிவிட்டுத் திரும்பினதாலன்றோ திருநறையூர் நம்பீ...அழுந்துரர் மேல் திசை நின்ற அம்மானே!' என்று பேசுகின்றார் என்று அழகிய மணவாள சீயர் ரஸமாக உபந்யசிப்பாராம், எட்டாம் பத்து 76 சிலையிலங்கு பொன்னாழி’ (அவதாரிகை): தாய்ப் பாசுரம். பெண்மகளின் நிலைமையைக் கண்ட திருத் தாயார் இவள் கண்ணபுரத்தம்மானைக் கண்டாளாக வேணும் என்று தெரிந்து கொண்டது எங்கனே? என்கின்ற சங்கை நீங்குமாறு பெரியவாச்சான் பிள்ளை தம் வியாக்கி யானத்தில் ஒர் ஐதிகம் அருளிச் செய்கின்றார்: ராஜேந்திர சோழனிலே ஒரு பிராமணன் மகன் புத்தரோடே சம்ப்ரதாய முண்டாய்ப் பூணு நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்; கூரத்தாழ்வான் அங்கே நடந்த வளவிலே சிகா யஜ்ஞோப வீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் பிதாவானவன் கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ?" என்று கேட்டான். புறம்புள்ளார் நீ இஃதறிந்தபடி எங்ங்னே?' என்று கேட்க, ஆழ்வான் 10. பெரி. திரு. 6.3;8 1. பெரி. திரு. 8.1 (திருக்கண்ணபுரம்) 2 - ۰ هفته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/202&oldid=920812" இலிருந்து மீள்விக்கப்பட்டது