பக்கம்:வைணவ உரைவளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 t 0 வைணவ உரைவளம் சொல்லிக் கொள்வதாக நுழைந்து புறப்படுகின்றார் இத் தருமொழியில். மற்ற திருமொழிகள் எல்லாவற்றையும் விட இத் திருமொழி மிகச் சிறப்பாக இருக்கும்; ஒவ்வொரு பாசுரத்தி லும் இரண்டிரண்டு திருப்பதிகளாக (நிகமனப் பாசுரம் தவிர்த்து)ஒன்பது பாசுரங்களிலே பதினெண் திருப்பதிகளை அநுபவிக்கும் அழகு மற்றைத் திருமொழியொன்றுக்கும் இல்லையன்றோ? 9Ꮾ "இரக்கமின்றியெங்கோன் : (அவதாரிகை) சென்ற திருமொழியில் நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத் திற்குச் செல்ல வேண்டும் என்ற இவருடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் எம்பெருமான் இன்னும் இவரைக் கொண்டு உலக நன்மையின் பொருட்டு இன்னும் பல பாசுரங்கள் பாடுவிக்கத் திருவுள்ளம் பற்றித் தனது திவ்விய அவதார சேஷ்டிதங்களை அநுபவிக்கத் தக்கனவாகக் காட்டி கொடுத்தான். அவற்றில் இலங்கைப் போர்க்களத் தில் இராவணன் உயிர் துறந்த பின்னர் மாண்டு போனவர் களுள் மிகுந்திருந்த அரக்கர்களும் தங்கள் தங்கள் உயிருக்கு மன்றாடும் நிலைமையில் பெருமாளுடைய வெற்றிச் செல்வத்தை எடுத்துரைத்துப் பாசுரமிட்டு மகிழ வேண்டும் என்ற ஆசை ஆழ்வாருக்குக் கிளர்ந்தது. அந்த வெற்றியைத் தம் வாயாற் பேசாமல் அரக்கர் பேசும் பாசுரமாக அருளிச் செய்கின்றார். இத் திருமொழிப் பாசுரங்கள் எல்லாம் தடம் பொங்கத்தம் பொங்கோ என்ற முடிவினைக் கொண்டு இறுகின்றன. தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு; அந்தசப்தாதுகாரம்' என்று பெரிய வாச்சான் பிள்ளையும் அருளிச் செய்துள்ளார். 2. பெரி. திரு. 16.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/235&oldid=920848" இலிருந்து மீள்விக்கப்பட்டது