பக்கம்:வைணவ உரைவளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வைணவ உரைவளம் 98 புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின் சரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் கிற்கத் தொழுதோம் இரங்கு ெேயமக் கெங்தைபி ரானே! இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா! குரங்கு கட்கர சே! எம்மைக் கொல்லேல்! கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ!' (புரங்கள் - முப்புரங்கள்; மாத்திரை-கணப் பொழுது: எரிக்கு-நெருப்புக்கு; அடுகின்றபொசிகின்றான்; உடன நிற்க-புருஷகாரமாக நிற்க, இரங்கு-இரங்கியருள்க) சாம்பவானைப் புருஷகாரமாகக் கொண்டு சுக்கிரீவ மகாராசரைச் சரணம் புகுகின்றார்கள். புரங்கள் மூன்றும் பொங்கெரிக்கிரை கனட, இதில் உள்ள இதிகாசம். முற்காலத்தில் தாரகாசுரனுடைய புதல்வர்க ளான வித்யுமாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவம் செய்து பிரமணிடம் பெருவரம் பெற்று வானத்துப் பறந்து செல்லும் தன்மை வாய்ந்த மூன்று பட்டணங்களை அடைந்தனர். மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த விடங்களில் பறந்து சென்று பல விடங்களின் மேலும் இருந்து அவ்விடங்களைப் பாழாக்கி வந்தனர். இத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர், முனிவர் முதலானாருடைய வேண்டுகோளினால் சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைக ளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகா மேருவை 4. பெரி. திரு. 10.2:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/237&oldid=920850" இலிருந்து மீள்விக்கப்பட்டது