பக்கம்:வைணவ உரைவளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 : 3 வில்லாகவும், ஆதிசேடனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகமைத்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும் அமைத்துக் கொண்டு போருக்குத் தயாராகச் சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சிரிப்பினின்று உண்டான தீயினால் அவ்வசுரர்களை அந்நகரங்களுடனே எரித் திட்டனன். இலங்கு வெங்கதிரோன்றன் சிறுவா! : இதிலுள்ள இதிகாசம்: மேருமலையில் நான்முகம் யோகம் பயின்று கொண்டிருக்கையில் அவர் கண்களில் நீர்த்துளி ததும்பியது; அதை அவர் கையாலெடுத்துக் கீழே எறிந்தனர். இந்நிலை யில் அஃது ஒரு குரங்காக மாறியது. அக்குரங்கு நான்முக னுக்கு ஒப்பான மகிமையும் மிக்க வேகமும் உடையோனாகி அம்மலையில் மலர்களும் கனி வகைகளும் நிறைந்த மரங்களடர்த்த வனங்கள்தோறும் தாவித் திரிந்து விளையாடிக் காலங் கழித்தது. அஃது ஒருநாள் நாவறண்டு நிற்வேண்டி அம்மலையின் வடபால் சென்றது. அங்கு ஒர் தடாகத்தைக் கண்டு அதன் கரையில் நின்று தண்ணிரை எட்டிப் பார்த்தது. அதனுள் தன் நிழல் தோன்றுவதைக் கண்ணுற்றுத் தனக்குப் பகையான மற்றொரு வானரம் அக்கயத்தினுள் குடிகொண்டு தன்னை இகழ்கின்றது எனக் கருதியது; அதனை வெல்வான் வேண்டி அம்மடுவில குதித்தது. குளத்தில் விழுந்து மெல்ல நீந்திக் கரையேறி யதும் அஃது ஒர் அற்புதமான அணங்காக மாறியது. காண்போர் மனத்தைக் கவரவல்ல பொற்கொடியென ஒரு பெண்மணி தனது வடிவழகினால் எல்லாத் திசைகளையும் ஒளிபெறச் செய்து கொண்டு அப் பொய்கைக் கரையில் நிற்குங்கால் தேவேந்திரன் நான்முகனிடம் சென்று அவரை யடிபணிந்து பூசித்துத் திரும்பி அவ்வழியாக வந்து கொண் டிருந்தான். அதே சமயம் சூரிய பகவானும் எங்கும் சுற்றித் திரிந்து இந்த அழகி நிற்குமிடத்தருகே வரலாயினன். இந்த இரண்டு தேவர்களும் அந்தப் பெண்மணியை ஒரே காலத் தில் கண்ணுற்றுக் காமப் பரவ சர்களாகி மெய்மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/238&oldid=920851" இலிருந்து மீள்விக்கப்பட்டது