பக்கம்:வைணவ உரைவளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 215 நந்தன் பெறப்பெற்ற நம்பி! நானுகங் துண்ணும் அழுதே, எங்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேம முன்னாயே." (சந்தம் மலர்-செவ்விப் பூக்கள்: குழல்-திருக் குழல் கற்றை; தாழ-அலைய; தனியேபலராமனை விட்டுத் தனியே; உகந்து ஓடி வந்து-மகிழ்ச்சியுடன் (என்பக்கல்) ஒடி. வந்து; வாங்கி-பிடித்து; உண்ணாய்உண்ண வேண்டும். வாயில் மடுத்து-உன் வாயில் நிறைத்து; அமுதே-அமுதமாயிருப்ப வனே; சேமம்-சேமத்தளிகை)

கண்ணபிரானே, குழலலைய ஒடி வந்து என் முலை களை உன்வாயில் மடுத்துப் பாலுண்ண வேண்டும்' என்று அழைக்கின்றாள். இங்கு ஆழ்வார் தன்னை யசோதை நிலையிலிருந்து கொண்டு பேசுகின்றாள். தன்னேராயிரம் பிள்ளைகளோடு ' இவன் தளர் ந ைட யி ட் டு விளையாடுகிறவனாகையாலே அவர்களையும் பலராமனை யும் விட்டுத் தனியே 3வரவேண்டு மென்றழைக்கின்றாள். முேலைத் தடம் தன்னை வாங்கி நின்வாயில் மடுத்துஎன்ற ஓர் ஆசை யசோதைக்கு இருந்தது போலும்; தன் கையாலே முலையை எடுத்துக் கண்ணபிரானது திருப் பவளத்தில் வைப்பதைக் காட்டிலும் அவன் தானே பிடித்து வாயில் மடுத்து உண்ணப்பெறில் அதிலே ஒரு தனிப்பட்ட இன்ப உணர்வு கண்டனள் போலும்.

'நந்தன் பெறப் பெற்ற நம்பி!'. 'நந்தன் பெற்ற நம்பீ,” என்றால் போதாதோ? பெறப் பெற்ற' என்பானேன்? 6. பெரி. திரு. 10. 4; ! 7. பெரியாழ். திரு. 1:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/240&oldid=920854" இலிருந்து மீள்விக்கப்பட்டது