பக்கம்:வைணவ உரைவளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 #49. சாமானியரென்று மயங்கி அடித்து விட்டேன்' என்று கூற, அதுகேட்ட இவர் அப்படியாகில் இனனமும் அடியும்; சாமானியனென்று என்னை எவ்வளவு அடித்தாலும் அத்தனையும் எனக்கு உத்தேச்யமே என்றாராம். அது போல பகவத் விஷயத்தில் ஈடுபட்டேன் என்கின்ற காரணத்தினால் அன்னை முனிவது முதலான கஷ்டங்கள் எனக்கு நேர்வனவாகில் தாராளமாக நேரட்டும் என்ப தாகப் பிள்ளையுறங்கா வில்லிதாசருடைய தாத்பரியம் காண்க. இதனால பகவத் விஷயத்தில் ஆழ்வார் நாயகிக்கு உள்ள காதலின் உறைப்பு வெளியாகும். 1Ο2 பேயிருக்கும் நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம் தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான் போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டிர் பெற்ற தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற் lரே!" நெடுவெள்ளம்-மகாப் பிரளயம்; பெருவிசும்புஆகாயம்; பெருகுங் காலம்- பிரவகித்த காலத்திலே; தாய் இருக்கும் வண்ணமேபெற்ற தாய் போல(ப்பரிந்து); உய்யக் கொண்டான்- உய்வித்தருளின பெருமான்: போயிருக்க-- வெறுக்கும் படியாக, புது தெய்வம்-மற்றொரு சிறு தெய்வத்தை: மனை வெந்நீர் ஆட்டுதிரோ- மணைக் 2. பெரி. திரு. 11: er 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/244&oldid=920858" இலிருந்து மீள்விக்கப்பட்டது