பக்கம்:வைணவ உரைவளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வைணவ உரைவளம் கட்டைக்கு உபசாரம் செய்கின்றீர்கள்; தகவு-இருக்கம்1 'மனிதர் முதலானோர் ஒருவரும் இல்லாமையாலே பேய் பிசாசுகளே இருக்கும் படியாக மகாப்பிரளய வெள்ளம் அண்டகடாகத்தின் மேலும் சென்று பெருகப் புகுந்த காலத்தில், பெற்ற தாய்போலப் பரிந்து வந்து விஷயங்களையெல்லாம் வாரித் திரட்டித் திருவயிற்றிலே வைத்து உய்விப்பித்தவrைான எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும்படியாக அவனைத் துதித்தல் பிராப்தமாயிருக்க அது செய்யாமல் அவன் திருவுள்ளம் வெறுக்கும்படியாகச் சில சிறு தெய்வங்களை நீங்கள் கொண்டாடுவது பெற்ற தாய்க்கு ஓர் உபசாரமும் பண்ணாமல் விட்டிட்டு அறிவற்ற தொரு மனைக் கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போலிரா நின்றது' என்று இழித்துரைக்கின்றார். பெற்ற தாயிருக்க மணைவெந்நீ ராட்டுதிர் : மனை" என்றது அசேதனப் பொருள்களையெல்லாம் சொன்ன படி. வெந்நீராட்டுதிர்' என்றது உபசாரங்கள் பலவற்றை யும் உள்ளடக்கிக் கூறியதாகும். மணை வெந்நீர் ஆட்டு மாப்போலே செய்கின்றீர்” என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கிச் சொல்லி யிருப்பதன் கருத்து யாதெனில்; சிறு தெய்வங்கள் வழிபாடு செய்வதற்கும் மனை நீராட்டுவதற்கும் யாதொரு வேறு பாடும் இல்லை. இதுதான் அது, அதுதான் இது என்ற இரண்டுக்குமுள்ள பேதமின்மையைக் காட்டினபடியாம். மகளிர் கருவுயிர்த்தவுடனே, பெற்ற அத்தாயையும் குழந்தையையும் நீராட்டுவித்தல் மலைநாட்டு வழக்கமாக மு ற் கா ல த் தி ல் இருந்ததாம். கருவுயிர்த்தவுடன் தாயை நீராட்டுவது பலவகை இன்னல்கட்குக் காரண மாவதால் அத்தாய்க்குப் பதிலாக ஒரு மணைக் கட்டையை நீராட்டுவிப்பது இடைக்காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடைபெற்று வருகின்றதாம். இதனைத் திருவுள்ளம்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/245&oldid=920859" இலிருந்து மீள்விக்கப்பட்டது