பக்கம்:வைணவ உரைவளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி 239 'உடையவன்': அநந்த கல்யாண குணங்களை உடையவன் என்று கூறுதலோடமையாது, இவற்றைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டும் படியாக இருப்பவன்; இதனால் இக் குணங்கள் இடையில் தோன்றியவை அல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாக இருப்பன என்பதைத் தெரிவித்தபடி. ஆழ்வான் பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து நிர்க்குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற் போல ஆழ்வார் நலமுடையவன்' என்றபடி கண்டாயே!' என்று பணித்தான். "மதி கலம் : ஞானம் பக்திகள் இரண்டனையும் தந்தான் என்று கூறுவாரும் உளர். 'இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி நலமான மதியென்று பொருள் கொண்டு, முளைக்கும்போதே வயிரம்பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே பக்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்" என்று பட்டர் அருளிச் செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பக்தி. அந்தப் பக்தியின் நிலையிலே இறைவ னுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய் வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பக்திதான் இவ்வாழ்வாருடைய பக்தி. ஆழ்வார் பிரபந்தரோ? பக்தி நிஷ்டரோ?' என்று எம்பாரைச் சிலர் கேட்க, ஆழ்வார் பிரபந்நர்: பக்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்' என்று அருளிச் செய்தார். எவ்வாறு? எனின்: நாம் அனைவரும் பிரபந்நர்களாக இருப்பினும், ஒராண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக் கொள்ளுகின்றோ மன்றோ? அது போன்று, :உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' யாவன் இவர்க்கு. 8. ஆழ்வான்-கூரத்தாழ்வான். 7. பொருள்-கருங்காலி மரம் போன்றவை. 9. திருவாய். 6.7:!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/262&oldid=920895" இலிருந்து மீள்விக்கப்பட்டது