பக்கம்:வைணவ உரைவளம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஒதுணவ உரைவளம் (நாளும்நின்று - எப்போதும் விடாது நின்று; சுடும்-வருத்துகின்ற; நம் பழமை ஆம் கொடு வினை-நாம் அறிந்தே நமக்கென்று தேடின பழமையாகிய மிகவும் கொடிய பாவங்கள்; உடனே மாளும்-ஆச்ரயித்தவுடனே தொலை யும்; மனனகம்-மனத்திலுண்டான, மலம் அற-அழுக்கு ஒழியும்படி; கழுவி-பரிசுத்தப் படுத்தி; நாளும்-நாள்தோறும்; நம்நமக்கென்றே உரிய; திருவுடை அடிகள் தம்எம்பெருமானுடைய, நலம் கழல் - அழகிய திருவடிகள்; வணங்கி-ஆச்ரயிக்க; மாளும் ஓர் இடத்திலும்-உடலை விடுகின்றகாலத்திலும்! வணக்கொடு-வணக்கத்தொடு; மாள்வதுமுடிவது; வலம்-நன்று; அடியவர்க்கு எளியவன் என்று கூறும் திருவாய்மொழி யில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், (பற்றப்படும் இறைவன் இவனோ மற்றையவரோ என்று) மனத்திலிருக் கும் ஐயமாகிய குற்றம் ஆறும்படி நீக்கித் தூய்மை செய்து, நம்முடைய திருமகள் கேள்வனுடைய நற்றாளை நாள் தோறும் வணங்க, எக்காலத்தும் நிலைபெற்று வருத்தும் நம்முடைய பழமையான மிகக் கொடிய வினைகள் உடனே அழியும்; அதற்கு மேல் ஒருகுறையும் இன்று. உயிர் உடலை விட்டு நீங்கும் இறுதிக் காலத்தும் வணக்கத்தோடு உயிரை விடுதல் சிறப்பினை உடையதாம்' என்கினறார். காளும் நம் திருவுடை அடிகள்தம் கலங்கழல் வணங்கி : இதற்கு ஒரு சம்வாதம் அருளிச் செய்கின்றார் கம்பிள்ளை. அதாவது சர்வேசுவரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கின்றான்; பிராட்டியைத் துணையாகப் பற்றவேண்டுவது ஏன்?" என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, "அவனையடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து அவன் பக்கல் முகம் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/271&oldid=920915" இலிருந்து மீள்விக்கப்பட்டது