பக்கம்:வைணவ உரைவளம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 52 வைணவ உரைவளம் தொண்டு புரிவதற்கு முற்பிறவியிலேயே முயலாத யான் இன்னமும் அகன்று போவதுவோ முறை? என்று கேளுங் கள்' என்று குயில்களை நோக்கிக் கூறுகின்றாள். முழுவினை-பெரும்பாவம்; சென்ற காலம் அனைத் திலும் செய்த பாவங்கள். முழுவினை' என்பதற்கு நம் பிள்ளை காட்டும் ஒர் ஐதிகம்; பராசரபட்டர் திருக்கோட்டி யூரில் எழுந்தருளியிருந்த காலத்து அங்குத் தெற்காழ்வான்.23 கோளரியாழ்வான் என்று இருவர் வாழ்கின்றனர். இவர் களுள் கோளரியாழ்வான் நற்குண நல்லொழுக்கமுடை யவன்; தெற்காழ்வான் சாதாரணமாகக் காணப்பெறும் ஒரு மனிதன். இருவரும் ஒரு சிறப்பான நன்னாளன்று ஒரு புண்ணிய தீர்த்தக் கரையில் சந்திக்கின்றனர். கோளரி யாழ்வான் தெற்காழ்வானை நோக்கி, அப்பா இன்று புண்ணிய தினம் ஆயிற்றே. இன்றாகிலும் ஒரு முழுக்கிட மாட்டாயோ?" என்கின்றான். அதுகேட்ட தெற்காழ் வான், முழுக்கிட வேணுமென விதிக்கின்ற உன் அபிப் பிராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் சில தொலையக்கூடும் என்பதுதானே; அந்தோ! என்னுடைய பாவம் திருக்கோட்டியூர் தெற்காழ்வார் கையில் உள்ள திருவாழியாலே போக்கினால் போகுமேயன்றி ஒன்றிரண்டு முழுக்கால் போகக் கூடியது அன்றுகாண்!' என்கின்றான். இந்தச் சொற்கள் பட்டருடைய திருச்செவியில் விழுந்த அளவில் ஆ! ஆ!! எவ்வளவு ஆத்திகனாயிருந்தால் இந்த வார்த்தை சொல்ல முடியும்: இவனை மேலெழுந்த வாரி யாகப் பார்த்து நாத் திகன் என்று நினைத்திருந்தோமே, இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன்!" என்று மிகவும் ஈடுபட்டதாக வரலாறு. நாயகி நிலையிலிருக்கும் ஆழ்வார் கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்க்கோர் குற்றேவல் 24 23. திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறை வனின் திருப்பெயர். 24. நாச், திரு. 13:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/275&oldid=920924" இலிருந்து மீள்விக்கப்பட்டது