பக்கம்:வைணவ உரைவளம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 27 1 அவனிடத்தில் இரந்து வேண்டும் குறை யாது உள்ளது?" என்கின்றார் ஆழ்வார். பரம பக்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங் காட்டுதல் இறைவனது சொரூபம். இறைவன் இவ்வான்மா பக்கல் வெறுப்பின்மைக்குக் காலம் பார்த்திருந்து முகங்காட்டுவா னான பின்பு இவனுக்கு என்ன குறை உண்டு? இவற்றால் வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது; அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயனற்றவை என்பது கருத்து. இப்பாசுரத்தின் கட்டுரையில் காணப்படும் ஐதிகம் : இவ் விடத்தில் வேல் வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது" என்பது. வேல் வெட்டிப்பிள்ளை என்பவர் நம்பிள்ளையின் மாணாக்கர்; பிள்ளை, நம்பிள்ளை. வேல்வெட்டிப் பிள்ளை நம்பிள்ளை யைப் பார்த்துப் பெருமாள் கடலைச் சரணம் புகுகின்ற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலான சில நியமங்க ளோடே சரணம் புக்கார்; ஆதலின் இப் பிரபத்தி உபாயம் வேறு சாதனங்களைப்போன்று சில நியமங்கள் வேண்டி யிருக்கிறதோ?’ என்று கேட்க: :அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்' என்று பெருமா ளுக்கு உபதேசித்தான் ரீவிபீஷணாழ்வான்; அவன்தான் பெருமாளைச் சரண்புகுகின்ற இடத்தில் கடலில் ஒரு முழு கிட்டு வந்தான் என்றில்லை; ஆக, இத்தால் சொல்லிற்றா யிற்று என் என்னில்: பெருமாள் இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்க ளோடு சரணம் புக்கார்; ரீவிபீஷணாழ்வான் இராக்கதர் குலத்தவனாகையாலே நின்றநிலையிலே சரணம் புக் கான்; ஆகையாலே யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையால் சர்வாதிகாரம் இவ்வுபாயம் என்று அருளிச் செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/294&oldid=920964" இலிருந்து மீள்விக்கப்பட்டது