பக்கம்:வைணவ உரைவளம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 வைணவ உரை வளம் ஐதிகம் : பிரமன் முதலானோர் எப்போதும் திரு மேனியைப் பற்றியிருப்பர்களோ?' என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ஒரே ஆபத்துகளிலே திருமேனியில் இடங் கொடுக் கிறான்; அந்நீர்மை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய்புலற்றுகிறார்களத்தனை" என்று அருளிச் செய்தார். 126 தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம் பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே?" | தேவும்-தேவர்களையும்; பூவில் - திருநாபி க் கமலத்தில்; தேவன் - பரதெய்வம்: எம் பெருமான்-எனது சுவாமி: பூசனை-திருவா ராதனம்; தகுமே -தகுமோ) இது நம்மாழ்வார் அருளியது; திருவாய்மொழியிலுள்ள பாசுரம். எம்பெருமானின் பரத்துவத்தை அவதாரத்தில் எடுத்துக் காட்டும் திருவாய் மொழியில் உள்ளது. இப் பாசுரம். தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள் களையும் உண்டாக்கவதற்குத் தனது திருவுந்தித் தாமரையி னின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கல்லாமல் ஏனை யோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவதாகுமோ? (ஆகாது என்றபடி) என்கின் நார் ஆழ்வார். இப் பாசுரத்தைப்பற்றிய இதிகாசம் கோவிந்தர் இராமா நுசரின் சிற்றன்னை பின் திருக்குமாரர். இவர் யாதவம் பிரகாசரோடு காசி யாத் திரையாகச் சென்றிருந்தபோது, கங்கையாற்றில் தீர்த்தமாடுங்கால், கோவிந்தருக்கு ஒர் 4. திருவாய் 2.2.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/297&oldid=920969" இலிருந்து மீள்விக்கப்பட்டது