பக்கம்:வைணவ உரைவளம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 வைணவ உரைவளம் திருமாலிருஞ் சோலை அழகரது வடிவழகில் ஆழ்வார் ஈடுபடுவதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், மழுங்குதல் இல்லாத கூர்மையான நுனியையுடைய சக்கரத்தைச் சிறந்த வலத்திருக்கையிலே யுடையவனாகி, தொழுகின்ற அன்பையுடைய யானை யைக் காக்கும் பொருட்டுக் கருடப் பறவையினை ஊர்ந்து வந்து தோன்றினையே; அங்ங்ணமிருக்க, குறைதலில்லாத ஞானத்தையே கருவியாகக் கொண்டு, பரந்த உலகத்திலே உனக்கு அடிமைப்பட்ட அடியார்க்குத் திருவருள் செய்தால் உனது பேரொளியானது மறையாதோ?' என்கின்றார். ஐதிகம் : திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய திருவத்யயந உத்சவத்தில் இப்பாசுரத்தைச் சேவியா நின்ற அரையர், உன் சுடர்ச்சோதி மறையாதே" என்ற அளவிலே, கோஷ்டியிலிருந்த சிற்றாட் கொண்டான் என்பார் * மறையும், மறையும்' என்றாராம். 1 38 ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்ாாம் தெழிகுரல்அரு வித்திரு வேங்கடத்து எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே." (ஒழிவு இல்-ஒய்வில்லாத உடன் ஆய்-கூடவே இருந்து; மன்னி-நிலைத்து நின்று; வழுகுற்றம்: தெழிகுரல்-கம்பீரமான ஓசை; தெழித்தல்-ஒலித்தல்: எழில் கொள்-நிறம் 2. திருவாய், 3.3:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/317&oldid=921015" இலிருந்து மீள்விக்கப்பட்டது