பக்கம்:வைணவ உரைவளம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 வைணவ உரை வளம் களை நோக்கி, ஆழ்வார் பாரித்த குறை தீரத் திருவேங் கடமுடையான் பரிசரத்திலேயிருந்து நித்திய கைங்கரியம் பண்ண விருப்பமுடையார் ஆரேனுமுண்டா?' என்று வினவியருள, குளிரருவி வேங்கடமாகையாலே எல்லாரும் குளிருக்கு அஞ்சி விடை கூறாதிருக்க, அனந்தாழ்வான் எழுந்து அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றார் - இது கேட்டு உகந்த எம்பெருமானார் நீரொருவரே ஆண் பிள்ளை' என்று போரப் பொலியக் கொண்டாடித் தழுவி யருளி விடை கொடுத்தருளினர்; அது முதலாக அனந்தாண் பிள்ளை என்று அவர் புகழுடன் வழங்கப்பெற்றார். இராமாநுசருடைய மாணாக்கராகிய இவர் 74 சிம்மா சனாதிபதிகளுள் ஒருவர். இவர் திருமாலைக்குச் சென்று அங்கு ஒர் ஏரியை வெட்டி அதற்கு இராமாநுசன் புத்தேரி' என்ற பெயரை அமைத்தவர். ஒரு நந்தவனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்து திருவேங்கட முடையானுக்கு நாடோறும் மலர்க் கைங்கரியம் செய்து கொண்டு வந்தவர். ஒருநாள் மலர் கொய்கையில் நல்ல பாம்பு ஒன்று இவர் கையிலே தீண்ட, அதற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாது மீண்டு, நீராடி, பின்னரும் சென்று மலர்களைக் கொய்து மாலை தொடுத்துத் திருவேங்கட முடையானைச் சேவிக்கச் சென்றார். அவ்வளவில் இறைவன் அர்ச்சகர் மீது ஆவேசித்து, நஞ்சு தீர்க்க வேண்டா என்றிருந்ததென்னை?' என்று கேட்டருள, இவரும் கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக் கின்றேன்; கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்த காடி வைகுண்ட நாதனைச் சேவிக்கின்றேன் என்றிருந் தேன்' என்று பதிலிறுத்த பரமயோகி. திருவாய்மொழிக்கு 'ஏய்ந்த பெருங்கீர்த்தி' என்ற தனியனை அருளிச் செய் தவர். கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் என்று இவரைக் கருதுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/319&oldid=921021" இலிருந்து மீள்விக்கப்பட்டது