பக்கம்:வைணவ உரைவளம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 வைணவ உர்ைவளம் அங்கு இருக்கிறபடியே தன் பக்கலில் வைத்துக் கொண்டு இங்கே பிறந்த வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதவர்கள், ஓதி உணர்ந்த ஞானிகளின் சந்நிதியில் எதனைச் சபிப்பார்கள்? இவர்கள் மனிதர்களா?" (அல்லர்) என்கின்றார். சாதுசனத்தை கலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு : எம். பெருமான் தன்னளவில் ஆசுரப் பிரகிருதிகள் எத்தனை அபசாரப் பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீற மாட்டான்; தன்னடியவர் பக்கல் அபசாரப் படுமளவில். அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்பது. நூற் கொள்கை.

ஈசுவரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையென்று ஜீயர் அருளிச் செய்வர்" என்பது பூர்வசன பூஷணத்தின் வாக்கியம். அதாவது-சங்கல்ப மாத்திரத்தாலே எல்லா வற்றையும் நிர்வகிக்க வல்ல சர்வ சக்தியான சர்வேசுவரன் தன்னை அழிய மாறி இதர சஜாதீயனாய் அவதரித்துக் கை தொடானாய் நின்று செய்த இராவண, கம்ச, சிசுபாலாதி நிரசன ரூபமான அதிமானுஷ்ய கிருத்தியங்களெல்லாம். பிரகலாதன், மகரிஷிகள், வாசுதேவ தேவகிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம், சகியாமையாலே என்று நஞ்சீயர் அருளிச் செய்வாராம்.

17. மனிதரே-அவர்கள் மனிதர் கோடியில் சேர்ந்த வர்களோ? :மானிடர் அல்லரென்று எம்மனத்தே வைத்தேனே' (பெரி. திரு. 11.7:9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திற்கு இதுவே மூலம். 18. பூரீவசன, 196. ஜீயர்-நஞ்சீயர்; ஆனைத் தொழில் - மனிதர்களுடைய செயல்கட்கு, அப்பாற்பட்ட செயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/331&oldid=921047" இலிருந்து மீள்விக்கப்பட்டது