பக்கம்:வைணவ உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 7 இவ்வியாக்கியானத்தை ஈடு என்ற பெயராலேயே வழங்குவர். ஈடு, கவசம். இம்முப்பதாறாயிரப்படி வியாக்கியானம் கற்போராலும் எழுதுவோராலும் வேற்று மக்களாலும் தன்னிலை திரிந்து மாறுபடாதபடி திருவாய் மொழியினைக் காத்து நிற்றலின் இவ்வியாக்கியனத்திற்கு *ஈடு' என்ற தனிச் சிறப்புப் பெயரினை நம் பெருமக்கள் வைத்து வழங்கினர். இனி, இது, நம்பிள்ளை நாடோறும் காலட்சேபத்தில் அருளிச் செய்தனவற்றை வடக்குத் திரு வீதிப்பிள்ளையால் எழுதி வைக்கப்பட்டதாதலின் இதனை ஈேடு' என்று வழங்கினர் என்று கோடலும் அமையும். இடுதல்-எழுதுதல். இனி, இது சுருதப் பிரகாசியினை ஒத்திருத்தலின் இதனை ஈடு என்று வழங்கினர் என்றும், தன்னைக் கற்பார் எல்லாரையும் இறைவனிடத்து ஈடு படச் செய்வதாதலின் ஈடு என வழங்கினர் என்றும் கூறு வது உண்டு. நம்பிள்ளை நாடோறும் காலட்சேபத்தில் அருளிச் செய்து கொண்டு போந்தவற்றை வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுதி வைத்தது ஆதலானும் இதற்கு ஆசிரியர் நம்பிள்ளையேயாதலானும் அப்பெரியாரின் திருப் பெயரைச் சேர்த்து இதனை நம்பிள்ளை ஈடு என்றும் வழங்குவர். இதுபற்றியும் ஒரு வரலாறு உண்டு.' திருவாய் மொழி பகவத் பிரபந்தம்' என்று கூறப் பவடுது போன்று, இவ்வியாக்கியானங்களின் தொகுதியும் பகவத் விஷயம் என்று போற்றப்பெறுகின்றது. வேறு சில உரைகள் : பெரிய வாச்சான் பிள்ளை திரு வாய் மொழிக்கு வியாக்கியானம் இட்டருளியது போலவே ஏனைய பிரபந்தங்கள் அனைத்திற்கும் வியாக்கியானம் செய்தருளினர். பெரியாழ்வார் திருமொழியின் முதல் நான்கு பத்திற்கு இவர் வியாக்கியானம் கிடைக்கவில்லை. 10. ஈடும் எடுப்பும் இல் ஈசன் (திருவாய். 1, 5. 3) என்ற விடத்து ஈடு' என்ற சொல் 1 ஒப்பு என்ற பொருளில் வந்திருத்தல் காண்க. 11. ஈட்டின் தமிழாக்கம்-பகுதி-1-பக் (43-44).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/36&oldid=921107" இலிருந்து மீள்விக்கப்பட்டது