பக்கம்:வைணவ உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 9. பயப்பது; சொல்லாற்றல் பொருளாற்றல்கள் அமைந்தது: சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்னும் வனப்பு வாய்ந்தது; கூறப்புகும் பொருளை விளக்குவதற்குக் காட்டப்பெறும் மேற்கோள் பொருள்கட்குப் பொருள் கூறும் முறை எத்தகையோரும் வியக்கத்தக்கது; பதச்சாரம் கூறுவதில் ஈட்டாசிரியர்க்கு ஒத்தாரும் மிக்காரும் இத் தமிழ் நாட்டில் இலர்; ஒரு பதிகத்தோடு மற்றொரு பதிகத் திற்கும், ஒரு பாசுரத்தோடு மற்றொரு பாசுரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பைக் கூறிச் செல்லும் பாங்கு வேறெவ்வுரையிலும் காண்டலரிது. இவ்வியாக்கியானங்க ளின்றேல் திவ்விய பிரபந்தத்தின் பொருள் சிறப்பினை யெல்லாம் அறிந்து கூறவல்லார் ஒருவரும் இலர். இந்த வியாக்கியானங்களில் காணப்பெறும் ஐதிகங்கள், இதிகாசங்கள், சம்வாதங்கள் முதலியன கற்போருக்குக் களிப்பினை நல்கும் பெருவிருந்தாய் இருக்கும். இது கருதியே இவை இந்நூலில் தொகுக்கப்பெற்று விளக்கமும் பொருந்தக் காட்டப்பெறுகின்றன. ஐதிகங்கள் முதலியன : இந்த நூலில் ஐதிகங்கள், இதி காசங்கள், சம்வாதங்கள் தொகுத்துக் காட்டப்பெற் றுள்ளன. ஐதிகம் என்பது, சம்பிரதாயம் அடியாக வந்த ஒரு வார்த்தை; அதாவது முன் நடந்ததைத் தெரிவிப்பது. எ.டு. முற்காலத்தில் அம்மங்கி அம்மாள் என்ற ஒர் ஆசிரியர் நோயால் வருந்தியிருக்க,.நஞ்சீயரும் நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்க எழுந்தருளியிருந்தனர்; அப்போது அவர் மிகவும் கிலேசப்படுவதைக் கண்டு நஞ்சீயர் ‘சுவாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே; எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணியிருக்கிறீர்; குணாநுபவத்தாலல்லது போதுபோக்கி யறியீர்; இப்படி யிருக்க உம்மையும் மற்றவர்களைப் போலே இப்படிக் கஷ்டப் படுத்துகின்றானே (இறைவன்)' என்றாராம். அதற்கு அவர், நீயாள வளையாளமாட்டோமே" என் றன்றோ கலியன் பாசுரம்? எம்பெருமானுக்கு வாழ்க்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/38&oldid=921150" இலிருந்து மீள்விக்கப்பட்டது