பக்கம்:வைணவ உரைவளம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 359 யன்றோ? கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே, வந்தவனைப் பார்த்து நீ யாவன் ஒருவனை ஆச்ரயித்து இந்தச் செல்வம் முழுவதும் பெற்றாய், அப்படிப் பட்டவனைக் காண நான் ஆச்ரயிக்கிறது. இப்படி வழியிலே போவார்க்கெல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன் காண்; இப்போது முகம் காட்டாதே போக வல்ல பிரானே! உன்னைக் கும்பிடுகின்றேன்" என்றானே யன்றோ? இன்னோர் ஐதிகம் : பகவானிடத்தில் சரணாகதி செய்து ஞானாதிகராயிருப்பாரொருவர் (திருமழிசைப் பிரானை) இருந்து தம்முடைய ஆடையைக் தைத்து நின்றாராய், அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகா நிற்க, இவர் அநாதரித் திருந்தாராய், தேவியானவள், நீர் சர்வாதிகராயிருக்க உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக் கொண்டிருந்தானே' என்ன, தேவனும் அவன் பகவத்பக்தன் போலே காண்’ என்ன, தேவியும் அதுதான் இருக்கிறபடி அறிவோம்’ என்ன, இருவரும் இவர் பக்கலிலே வந்து, நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும் வரங்களும் வேண்டிக் கொள்ளக் கடவர்களாக இருப்பர் கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபகாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக் கோடல் செய்யாமல் இருந்தாயே" என்ன, *அழகிது! அவையெல்லாம் செய்யக் கடவன்; மோட்சம் தரலாமோ?’ என்ன, அது நம்மாலே செய்யலாமதன்று: பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெறவேண்டும்" என்ன, ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, அது கர்மங் களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது; நம்மால் செய்யப் போகாது" என்ன, ஆகில் நீ செய்யு மது இந்த ஊசி போகும்" வழியே நூலும் போகும்படி அநுக்ரகித்து நடக்குமித்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/382&oldid=921156" இலிருந்து மீள்விக்கப்பட்டது