பக்கம்:வைணவ உரைவளம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 வைணவ உரை வளம் பண்டைய முதலிகள் பத்தாம் பாசுரத்தில் (6.1:10) பிரணய ரோஷம் (ஊடல்) தோற்றச் சொல்லுகிறாள் என்று நிர்வகிப்பார்கள். ஆனால் பட்டர், பாசுரந் தோறும் கிலாம் (ஊடல்) தோற்றச் சொல்லுகிறாள்' என்று அருளிச் செய்வர். காரணம், உணர்த்த ஊடல் உணர்ந்து (6.1:5) என்று ஊடலைக் கூறுகின்ற பாசுரத்தை ஒட்டியது. 電磁3 பேரற்றி யானிரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்! சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டுர்உறையும் ஆற்றல் ஆழி கங்கை அமரர்பெரு மானைக் கண்டு மாற்றம் கொண்டருளிர் மையல் தீர்வதொரு வண்ணமே." இரந்தேன் - வேண்டுகிறேன்; உறை - வாழ் கின்ற; வாளை-வாளை மீன்கள்; துள்ளும்களித்து உகளும்; ஆற்றல் ஆழி-சக்தி மிகுந்த திருவாழி; மையல்-வியாமோகம்; மாற்றம் -நல்வார்த்தை) மகள் வாசுரம் : பறவைகளைத் துதுவிடும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில், புன்னை மரத்தின் மேல் தங்கியிருக்கின்ற அழகிய குயில்களே! யான் போற்றி இரந்தேன்; சேற்றிலே வாளை மீன்கள் துள்ளி விளையாடு கின்ற திருவண் வண்டுர் என்னும் திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்ற பெருமிடுக்கினையுடைய சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்ற நித்திய சூரிகளுக்குத் தலைவனான, எம்பெருமானைக் கண்டு, என் மயக்கம் நீங்குவதற்கு உரியது ஒரு தன்மையாக மறு 9. திருவாய். 6.1:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/421&oldid=921237" இலிருந்து மீள்விக்கப்பட்டது