பக்கம்:வைணவ உரைவளம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 339 மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்' என்று பேசுகின்றாள் ஆழ்வார் நாயகி. "புன்னை மேலுறை பூங்குயில்காள் : வளர்த்ததனால் பயன் பெற்றேன்' என்னும்படியாக ஆசிரியர் பக்கலி லேயே வளரும வர்கள் (ஸ்வாப தேசத்தில்) குயிலாகச் சொல்லப்படுவார்கள். குயில் கட்கு வடமொழியில் சுபப்ருதம்' என்று பெயர்: காக்கைக் கூட்டிலே கொண்டு விடப் பெற்று அவற்றால் போஷிக்கப்பட்டு வளருமவை என்றபடி, அதுபோலே பரனான ஆசார்யனால் போஷிகப் பட்டு வளரும் குருகுல வாசிகளைச் சொல்லிற்றாகின்றது.

புன்னை மேலுறை என்றது. புன்னையின் கீழுறை, என்றவாறு. இதில் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக ஈடுபட்ட தலமாகிய திருவரங்கம் பெரிய கோயிலில் திருப்புன்னை மரம் நெடுநாளாக இருப்பது யாவரும் அறிந்ததே. பட்டரும் பூரீரங்க ராஜஸ்தவத்தில் இப்புன்னை மரத்தை வருணிக்கின்றார். முன்புள்ள நம் மூதலிகள் எல்லாரும் இப்புன்னையின் கீழிருந்து பகவத் விஷயார்த்தம்பற்றி ஆய்வு நடத்தினர் என்று தெரிவதால் இங்கு ஆழ்வார்கள் அன்னவர்களையே விளிக்கின்றனர் என்று கொள்ளத்தகும், பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத், தீம்பலங்கனி தேனது நுகர்' என்று குயில்களின் ஓர் இயல்பை அருளிச் செய்கின்றார். முதலில் மாந்தளிர் களில் வாய் வைத்ததனால் வாய்துவர்ப்புப் போக, அந்தத் துவர்ப்பு நீங்குதற்காகப் பலாப்பழத் தேனைப் பருகுவ தாகச் சொல்லுகிற இதனால், முதலில் சாமானிய சாத்திரங்களில் வாய் வைத்துப் பிறகு சிறப்பான சாத்திரங் அளில் இன்பமாகப் போது போக்கும் படியைச் சொல்லுவ தாக அமைகின்றது.

T0. திருநெடுந் 14 11. பெரி. திரு. 3.3:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/422&oldid=921238" இலிருந்து மீள்விக்கப்பட்டது