பக்கம்:வைணவ உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 17 பொடி யாழ்வாரைத் திருமார்பாகவும் திருமங்கை யாழ்வாரைத் திருநாபியாகவும், மதுரகவிகளையும் எம்பெருமானாரையும் திருவடிகளாகவும் Gluff(3 unrff அருளிச் செய்வர். இவருக்குத் திருமுடியாகத் திகழ்பவர் நம்பெருமாள். நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குகின்றார் என்பது வைணவ சமயக் கொள்கை, அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் செல்வோரின் முடிமீது அவர் திருவடியாக வைக்கப் பெறுவதைச் சடகோபன், சடாரி' என்று வழங்கு கின்றனர். சடகோபன், சடாரி' என்பன நம்மாழ் வாரின் திருப்பெயர்களாகும். (iii) இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாவும், நாத முனிகளைத் திருமுகமாயும், உய்யக் கொண்டாரைக் (புண்டரீகாட்சரைக்) கண்ணாகவும், மணக்கால் நம்பியைக் (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும், ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாயும், திருக்கச்சி நம்பியைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தன மாயும், திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலையாண்டானை முதுகாயும், கிடாம்பியாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாயும், பட்டரையும் நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாயும், வடக்குத் திருவீதிப் பிள்ளையை முழங்கால்க ளாகவும், பிள்ளை லோகாசார்யரைத் திருவடியாயும், திருவாய்மொழிப் பிள்ளையைப் பாதரேகையாகவும், மணவாளமாமுனிகளைப் பாதுகையாயும், சேனாபதி pயரை ஊர்த்துவ புண்டரமாகவும் (திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும், முதலியாண்டானைத் திரிதண்ட மாயும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாக வும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும், திருக்குருகைப் பிரான் பிள்ளானைத் தோமாலிகையாகவும், பிள்ளை வை.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/46&oldid=921279" இலிருந்து மீள்விக்கப்பட்டது