பக்கம்:வைணவ உரைவளம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 449 பொருள் தவிர, எனறு சால்லப்படுகின்ற" என்ற பொருளும் உண்டாதலால், என்திருமகள் சேர்மார்ப னென்று சொல்லப்படுகிற என்னுடைய ஆவியே என்கிறாள்" என்று விளக்கி நஞ்சீயர் நிறுத்தினபடி. பட்டர் அந்த இன்சுவையை அறிந்து திருவுள்ளம் உடை குலைப் பட்டார் என்றதாயிற்று. இவர்க்குப் பிராணன் ஒருவாயு விசேடம் அன்று; ஒரு மிதுனமாயிற்று. திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே! என்னும்'. இங்கு என் திருமகள் சேர்மார்பன் என்று சொல்லப்படுவதான என் ஆவியே! என்று பொருள் விளக்கமானபடி காணத்தக்கது. ஆனது பற்றியே இவர்க் குப் பிராணன் ஒரு வாயு விசேடம் அல்ல; ஒரு மிதுன மாயிற்று' என்றருளிச் செய்தது. 2○7 வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சி னுடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணிர் என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர் காள்! வெள்ளைச் சுகமவன் வீற்றி ருந்த வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத்திருப் பேரையில் சேர்வன் நானே.” (சுரிதல்-உள்ளே சுரிந்திருத்தல்; ஆழி-சக்கரம்; புள்ளை-கருடப் பறவையை, கடாகின்ற ஆற்றை-நடத்துகிற படியை, வெள்ளம் —II இவளுக்கு உயிர் மிதுனம் (இரண்டு; பிராட்டி யுடன் கூடிய பெருமாள்). 12, திருவாய். 7.3:1 வை.-29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/472&oldid=921293" இலிருந்து மீள்விக்கப்பட்டது