452 வைணவ உரைவளம் என் ஆழி வண்ணன்பால் இன்று (மூன். திருவருந். 1) என்று பேயாழ்வார் குறிப்பிடும் வடிவழகைப் போன்று திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகிய வாயன்றே இருப்பன? ஆழிவார்கள்தாம்' அவனைக் கைசெய் திருக்கையாலே29 ஆபரணக் கோடியிலே இருப்பார்கள். நெஞ்சினுடே : அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?" என்று இருக்கிறார்கள் இவர்கள். குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்மாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்” (பாரதம்-ஆரண்) என்னுமாறுபோலே, நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள். ஒருவாசத் தடத்தில்2 அன்னங்கள் சக்கர வாகங்கள் போன்ற ஆழ்வார்களும், காடுபட அலர்ந்த தாமரைபோலே இருக்கின்ற திவ்விய அவயவங் களும், அத்தடாகத்தில் நீரும் இலையும்போலே இருக்கிற திருமேனியுமாய், அதனைக் கினிய (கபளிகரிக்க) ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கின்ற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி,22 இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி, இவ்விடத்தில் ஓர் ஐதிகம் : அதுகூலருடைய மனத்தில் எம்பெருமான் விக்கிரக ரூபமாக வீற்றிருப்பதற்கு ஈட்டாசிரியர் காட்டும் ஐதிகம். நஞ்சீயர் கோயிலுக்கு ~-पृष्ठ ஆழ்வார்கள் என்றது திவ்விய ஆயுதங்களை. 20. கைசெய்தல்-அலங்கரித்தலும் துணைசெய்தலும் போர் செய்தலுமாம். 21. திருவாய். 8.5;1 22. அரவத்து அமளியோடும்’ (பெரியாழ். திரு. 3.2:10) பனிக்கடல் பள்ளிக் கோளை (டிெ 3.4:9) எனப் பெரியாழ்வாரின் பாசுரங்கள் இவ்விடத்து அநுசந்திக்கத் தக்கவை.
பக்கம்:வைணவ உரைவளம்.pdf/475
Appearance