பக்கம்:வைணவ உரைவளம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 455 தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்கண் டாரும் அ.தே% என்ற கம்பநாடன் கூறுவதுபோல் ஆழ்வார் திருவுள்ள மானது தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொரு அவயவம் தன்னிலும் தனித் தனியே சுழியாறுபட்டது என்பது இதனால் தெளிவாகும். இவ்விடத்தில் நம்பிள்ளை ஈடு: ஸெளபரி என்பான் ஒருத்தன் ஒரு ஸ்-க்ருதமடியாக ஐம்பது வடிவு கொண்டானிறே: அவ்வளவல்லவிறே இவள் கலந்த விஷயம் பண்ணவல்லது. அவன் வ்யக்திதோறும் பரிஸ்மாப்ய வர்த்திக்குமாபோலேயாயிற்று இதுவும் அவய வங்கள்தோறும் தனித்தனி அகப்படவல்லபடி.' ஸெளபரி வரவாறு : இந்நூல் பாசுரம்-25இல் காண்க. 2O3) ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ, திசை வாழி யெழத்தண்டும் வாளுமெழ, அண்டம் மோழை யெழமுடி பாதமெழ, அப்பன் வாழி யைழவுல கங் கொண்ட வாறே.2' (ஆழி-சக்கரம்; தண்டு-கதை; வாழி-மங்களா சாசன ஒவி; மோழை-நீர்க் குமிழி; அப்பன் - சர்வேசுவரன்; கொண்ட - அளந்து கொண்ட ஆறு-முறை : எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒரு பாசுரம்; இதில் எம் 26. கம்பரா.பால. உலாவியல், 19 27. திருவாய். 7.4:1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/478&oldid=921299" இலிருந்து மீள்விக்கப்பட்டது