பக்கம்:வைணவ உரைவளம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 வைணவ உரைவளம் பெருமான் திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயல் பேசப்பெறுகின்றது. ஆழ்வார், 'திருவுலகு அளந்தருள வளருகின்றபோது, திருவாழியாழ்வான் முன்ான தோன்ற வும், பின் பாஞ்சசன்யம், கோதண்டம் ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன வாள் என்ன இவைகள் தோன்றவும், அண்ட முகடு பிளந்து, நீர்க் குமிழி தோன்றவும், திருமுடியும் திருவடியும் ஒரு சேர எழும்படி யாகவும், நல்ல காலம் தோன்றும்படியாகவும் ஆயின; ஆதலால் என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!" என்கின்றார். 'ஆழி எழ' : தாய் ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந் நூற்றுக் காதம் சிறகடித்துக் கொள்ளும் என்னுமாப் போலே, முற்கோவி வளர்ந்தபடி. சிறகடித்துக்கொள்ளுகை யாவது, பின்பு தூரப் பறப்பதற்குத் தகுதியாம்படி இளமை யிலே பயிலுதல். அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத் தக்க இடத் தைக் கண்டால் வாளா இரார்களேயன்றோ? பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலட்சண்யம் அன்றோ? துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளினபோது அவர்கள் செய்த வஞ்சத் தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிதை யில் படுக் கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ விதுராழ்வான்? மகா புத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்’ ’ (பாரதம்-உத்தியோக) என்கிறபடியே, குடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? பேரன்பாலே கலங்குவதற்குக் காரணம் தெளிந்த ஞானமே" என்பதனை ஆப்த சம்வாதத்தாலே தெரிவிக் கின்றார். பிள்ளையுறங்கா வில்லிதாசர் : மகாமதி என்றது, மதிகேடர் எப்படியோ?' என் றார். இந்த தாசர்தாம் பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/479&oldid=921300" இலிருந்து மீள்விக்கப்பட்டது