பக்கம்:வைணவ உரைவளம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 463 பெருமானும் அவனைத் தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டான் என்பது மார்க்கண்டேய சரிதத்தின் முடிவாகும். 213 தெளிவுற்று வீவின்றி கின்றவர்க் கின்பக் கதிசெய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென்குரு கூர்ச்சட கோபன்சொல் தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர் தெளிவுற்ற சிங்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.' (தெளிவு-சொரூபத்தில் தெளிவு, உற்று-அடைந்து: வீவு-இடையீடு; பாமரு-பரந்திருக்கின்ற) எம்பிராற்கு ஆளாகாத உலகத்தாரே நோக்கி இரங் குவதாக அமைந்த திருவாய்மொழியின் பலசுருதிப்பாசுரம், இதில் ஆழ்வார் ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்திற்கு இடையீடு இல்லாமல் நின்ற அடியார்கட்கு மோட்ச உலகத்தைத் தருகின்ற ஞானமே சொரூபமான கண்ண பிரானை, அழகிய திருக்குருகூரில் அ வ த ரி த் த சடகோபரால் அருளிச் செய்யப் பெற்ற தெளிந்த ஆயிரம் திருப்பாகரங்களுள் இவை பத்தையும் ஒதவல்லவர்கள் பரந்திருக்கின்ற மூன்று உலகத்திற்குள் தெளிந்த சிந்தை யினையுடையராவர்' என்கின்றார். தெளிவுற்று கின்றவர்க்கு விவு இன்றி கின்றவர்க்கு - உபாயமும் உபேயமும் அவனே என்று தெளிந்திருப்பவர் கட்கு; இந்தத் தெளிவு இருக்கச் செய்தேயும் சிலர் ஆபாச புத்திகளைக் கொண்டு வாதங்கள் செய்து புத்திபேதத்தை 36. திருவாய். 7.5:11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/486&oldid=921308" இலிருந்து மீள்விக்கப்பட்டது