பக்கம்:வைணவ உரைவளம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ኸዊ வைணவ உரைவளம் தான்தன்னைக் கவி பாடினானகில் நீர் கவி பாடினீர் என்று நாட்டிலே பிரசித்தமானபடி எங்ங்னே? என்னில்: மாயன்-சொல்லவேனுமோ? ஆச்சரியமான சக்தியோடு கூடினவன் அன்றோ? என்னைக் கருவியாகக் கொண்டுதானே கவி பாடி னான்; இஃது எங்ங்னே என்னில்: எல் முன் சொல்லும்அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன். தான் சொன்னானாகில் கீதையைப் போன்று வறமுறுக லாய்ப் (கருகிப் போதலாய்ப்) போம் அன்றோ? இவ்விடத்தில் ஓர் ஐதிகம் : கம்பி திருவழுதி நாடு தாசர், சகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே44 வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப் பித்துவிடுமத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், சர்வேசுவரனும் கிராமத்தி லுள்ளாரும் புறப்பட்டு எதிர்கொண்டு தங்கள் இருப் பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியா நிற்பார்கள்' என்று அருளிச் செய்வர். 2瞿9 ஆம்முதல் வன் இவன் என்றுதன் தேற்றிஎன் காமுதல் வந்து புகுந்துகல் இன்கவி துமுதல பக்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?4" இவன் ஆம் முதல்வன்-இவன் பிரபந்த ஜன கூடஸ்தனாகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி, தன்தேற்றி-தெளிவைப் பிறப்பித்து: 44. சந்தியா சதஸ்ஸ்-ஊர்ப் பொதுச் சாவடியில் மாலை நேரத்தில் நடைபெறும் கூட்டல், 45. திருவாய். 7.9:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/495&oldid=921318" இலிருந்து மீள்விக்கப்பட்டது