பக்கம்:வைணவ உரைவளம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 473 து முதல் பத்தர்க்கு-மு.முட்சுகளுக்கு: தான் தன்னை சொன்ன-தானே தன்னைப் பாடின, வாய் முதல் அப்பன்-வாக்குக்கு முதல்வ னான மகோபகார கனை; என்று-என்றைக் காவது, மறப்புனோ-மறக்கமாட்டேன்! இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளி வமைக்குக் கைம்மாறு இல்லை என்பதாகக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் 'கவி பாடுகைக்கு முதல்வன் ஆவான இவன் என்று தன்னை நான் தெளியும் படி செய்து, முதலில் என் நாவில் வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை முதன்மை பெற்ற பரிசுத்தரான அடியார் கட்குத் தானே தன்னைச் சொன்ன என் வாக்கிற்குக் காரணனான அப்பனை இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை' என்கின்றார். ஆம் முதல்வன் இவன் என்று தன்தேற்றி : முதல்வன் ஆம் இவன் என்று தன் பக்கலில் எனக்குத் தெளிவு உண்டாகச் செய்து. இதற்கு இரண்டு வகையான நிர்வாகம். முதல்வன் என்பது எம்பெருமானிடத்திலே அந்வயிப்பதாக ஒரு நிர்வாகம், அதாவது, இந்த எம் பெருமானே ஜகத்காரண பூதனென்று தன் பக்கலில் எனக்குத்தெளிவு பிறக்கும்படியாகப் பண்ணி என்பது முதல் நிர்வாகத்தின் பொருள். மற்றொரு நிர்வாகம் முதல்வன் என்பது ஆழ்வாரிடத்தில் அந்வயிப்பது. குருகூர்ச் சடகோப னாகிய இவன் சம்சாரிகளைத் திருத்திப் பணி கொள்ளும் விஷயத்திலே முதல்வனாகப் கடவன்-தலைவனாகக் கடவன்-என்று திருவுள்ளம்பற்றி என் பக்கலில் தன் சொரூபம் முதலியவைகளைத் தெளியப் பண்ணி என்பது இரண்டாம் நிர்வாகத்தின் பொருள். இங்கு பிராசங்கிகமாக (இடைப்பிறவரலாக) ஓர் ஐதிகம் : இங்கே அருளிச் செய்யும் வார்த்தை-திருப் புற்றுக்குத், கிழக்கே சரியமாணிக்காழ்வார் திருமுன் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/496&oldid=921319" இலிருந்து மீள்விக்கப்பட்டது