பக்கம்:வைணவ உரைவளம்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 475 கூறும் பாசுரங்களில் ஒன்று ஆழ்வார், தகுதியான கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருவாறன் விளை என்னும் திவ்வியதேசத் தில் எழுந்தருளியிருக்கின்ற, மிகு புகழையுடைய மூன்று உலகங்கட்கும் தலைவனும், வட மதுரையிலே அவதரித்த. நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுமான எம்பெருமானது இணைத்தாமரை மலரடிகளை, இங்கே இருந்துகொண்டே மனத்திலே நினைப்பதற்கு எல்லா நேரத்திலும் நாடோறும் வாய்க்குமோ?' என்று பார்க் கின்றார். நம்மாழ்வார் எந்தத் திருக்கோயிலையும் நேரில் சென்று சேவிக்கவில்லையென்றும் ஆழ்வார் திருநகரியி லுள்ள திருப்புளியாழ்வாரின் திருவடியிலிருந்துகொண்டே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாசுரங்களால் பரவினார் என்றும் ஒரு கொள்கை நிலவி வருகின்றது. இக் கொள்கையினை ஈங்கு நினைக்கப் பெற (முதலடி) என்ற சொற்றொடர் அரண் செய்வதாகக் கருதலாம். சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்திலே போய் ஏற்றமாக அநுபவிப்பதைவிட மனோரத மாத்திரத்தாலே அநுபவிப்ப தையே பேறாகக் கருதுகின்றார் ஆழ்வார். இதனை விளக்க ஒர் ஐதிகம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். ஐதிகம் : முற்காலத்தில் இளையாற்றுக்குடி கம்பி என்ற பரம பக்தர் ஒருவர் இருந்தனர். நம்பி திருநாட்கள் தோறும் கோயிலுக்கு வந்து பெருமாளைச் சேவித்துப் போவாராம். திரும்பவும் திருநாள் வருந்துணையும் அதனையே பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டிருப் பாராம். ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத் துக் கொண்டிருக்கும்பொழுது அமுது செய்கைக்குப் போது வைகிற்று' என்றார்களாக; ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது" என்றாராம். அவர் நூறு வயதும் புகுகை யாலே வலிமை குன்றி திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப் பெற்றிலர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/498&oldid=921321" இலிருந்து மீள்விக்கப்பட்டது