பக்கம்:வைணவ உரைவளம்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 வைணவ உரைவளம் 23ー33 ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும் பேரா யிரம்கொண்டது ஒர்பீடு உடையன் கரா யினகாள கல்மே ணியினன் நாராயணன்கங் கள்பிரான் அவனே." (ஒர் ஆயிரமாய்-ஒரு திருநாமமே ஆயிரம் திரு நாமமாய்க் கெண்ேடு; அளிக்கும்--இரட்சிக் கும்; ஆயிரம் பேர்-ஆயிரம் திருநாமங்கள்! பீடு-பெருமை; காளம் கார் ஆயின -காள மேகம் போலே சாமளமான, நல்மேனியன்அழகிய திருமேனியையுடையவன்; பிரான்உபகாசரன்) எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், ஒவ்வொரு திருப்பெயரே ஆயிரம் முகமாக நின்று ஏழு உலகங்களையும் பாதுகாக்க வல்லதாக இருக்கும்; அப்படிப்பட்ட திருப் பெயர்கள் ஆயிரமுடையவன். ஆகையாலே ஒப்பற்ற பெரு மையையுடையவன்; காளமேகம் போன்ற கரிய அழகிய திருமேனியையுடையவன்; நாராயணன் என்னும் திருப் பெயரையுடையவன்; அவனே நமக்கு உபகாரகன் ஆவான்' என்கின்றார். பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் : இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்த பலபல திருநாமங்களையுடையனாகின்ற பெருமை பொருந்தியவன். திருநாமம் தஞ்சமாக இருக்கும் என்பதற்கு ஒர் ஐதிகம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். கோயிலாய்த்தான் புத்திர வியோகத்திலே பட்டர் ரீபாதத் திலே வந்து தன் சோக மெல்லாம் தோற்ற விழுந்து கிடக்க, 14. திருவாய் 9.3:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/523&oldid=921350" இலிருந்து மீள்விக்கப்பட்டது