பக்கம்:வைணவ உரைவளம்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 i () வைணவ உரை வளிமி அன்று இரவு அவனுடைய கனவில் நீ இட்டபூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை' என்று அருளிச் செய்தான் எம்பெருமான் என்பது வரலாறு. பத்தாம் பத்து 24O ஏத்து மினருமர் காள் என்று தான்குட மாடு கூத்த னை, குரு கூர்ச்சட கோபன்குற் றேவல் வாய்த்த ஆயிரத் துள்ளிவை வன்திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே." இது திருவாய்மொழிப் பாசுரம்; திருமோகூர்மீது மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருவாய்மொழியின் பல சுருதிப் பாசுரமாகும். சடகோபர் அருளிச் செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்க வல்லவர்கட்குத் துன்பமெல்லாம் அழியும்' என்கின்றார் ஆழ்வார். திருமோகூர்க்கு ஈத்த பத்திவை என்ற விடத்து அறியத் தக்க தொன்றுண்டு; திருவாய்மொழித் தனியன்களுள், வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் lo திருவாய். 10. 1.11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/533&oldid=921361" இலிருந்து மீள்விக்கப்பட்டது